நீலகிரி மாவட்டத்தில் தேயிலைக்கு விவாசயத்திற்கு அடுத்தபடியாக அதிகளவில் கேரட், பூண்டு, உருளைக்கிழங்கு உள்ளிட்டவை பயிரிடப்படும். இதில் கேரட் பயிரிட அதிகளவில் முதலீடு தேவைப்படுவதால் சிறு, குறு விவசாயிகள் கேரட் பயிரிட ஆர்வம் காட்டுவதில்லை. அதனையும் மீறி கடன் பெற்று சிலர் பயிரிட்டும் வருகின்றனர்.
இங்கு விளைவிக்கப்படும் காய்கறிகள் விற்பனைக்காக சென்னை, திருச்சி, மதுரை என உள்மாவட்டங்களுக்கும், பெங்களூரு போன்ற நகரங்களுக்கும் கொண்டுச்செல்லப்படுகின்றன.
பல்வேறு மாவட்டங்களுக்கு விற்பனைக்கு அனுப்புவதால் இரவு பகல் பாராமல் இத்தொழிலாளர்கள் உழைத்து வருகின்றனர். இந்நிலையில் கேரட் கழுவும் இயந்திரங்களில் பாதுகாப்பும், தண்ணீர் சுத்திகரிப்பும் இல்லை எனக் கூறி இரண்டு இயந்திரங்கள் சீல் வைக்கப்பட்டுள்ளன. இதனைக் கண்டித்து கேரட் கழுவும் இயந்திர உரிமையாளர்கள் சங்கத்தினர் இயந்திரங்களை காலவரையற்று இயக்க போவதில்லை என போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.
இதனால் அறுவடைக்கு தயாரான கேரட் அழுகும் நிலை ஏற்பட்டுள்ளது. தற்போது, தொடக்கக் காலத்தில் கேரட்டை கழுவும் முறைப்படி தோட்டத்திலே கழுவி விற்பனைக்கு அனுப்பி வருகின்றனர்.
மாவட்ட நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுத்து கேரட் கழுவும் இயந்திரங்களை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க:'உரிய விலை கிடைக்கவில்லை' - கேரட் விவசாயிகள் கவலை