நீலகிரி மாவட்டம், குன்னூர் அருகே வெலிங்டன் கன்டோன்மென்ட் வாரியத்தில் ஏழு வார்டுகள் உள்ளன. இங்கு 200க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில், பரமேஸ்வரன் என்பவர் ஓய்வு பெற்று ஆறு மாதமான நிலையில், அவரை வீட்டை விட்டு காலி செய்ய கன்டோன்மென்ட் நிர்வாகம் வலியுறுத்தியுள்ளது.
அதனோடு வீட்டிலிருந்த அவரது பொருள்களையும் எடுத்து வெளியேற்றியுள்ளது. இதன் காரணமாக, கோபமடைந்த 200 தூய்மை பணியாளர்கள் ராணுவ மையம் தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. போராட்டக்காரர்களுக்கு ஆதரவாக சங்க நிர்வாகிகளும் களத்தில் இறங்கி போராடினர்.
போராட்டம் தொடர்பாக தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், தூய்மைப் பணியாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி கலைந்து செல்ல அறிவுறுத்தினர். இவ்விவகாரத்தில் சம்பந்தப்பட்ட அலுவலர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி சுமூக தீர்வு கிடைக்க வழிவகை செய்வதாக, தூய்மை பணியாளர்களிடம் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: வீடுகளில் விநாயகர் சதுர்த்தி கொண்டாடலாம்: தமிழ்நாடு அரசு