நீலகிரி மாவட்டத்தில், குன்னூர் மலையில் இயக்கப்படும் ரயில் நூற்றாண்டு பழமை வாய்ந்தது. நிலக்கரி - நீராவி இன்ஜின் மூலம் இந்த மலை ரயில் இயக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது பர்னஸ் ஆயில் இன்ஜின் மூலம் இந்த மலை ரயில் இயக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், தண்டவாளத்தை இணைக்கும் ஸ்லீப்பர் கட்டைகள் பல இடங்களில் பாதிப்படைந்துள்ளது. எனவே, பாலங்கள் அமைந்த இடங்களில் தண்டவாளத்திற்கு அருகே உள்ள மரக்கட்டைகளை அகற்றிவிட்டு, புதிதாக பிளாஸ்டிக் ஸ்லீப்பர் கட்டைகள் பொருத்த தென்னக ரயில்வே முடிவு செய்தது.
இதனடிப்படையில் அமெரிக்காவிலிருந்து பிளாஸ்டிக் ஸ்லீப்பர் கட்டைகள் வரவழைக்கப்பட்டன. இவற்றை விரைவில் தண்டவாளங்களில் பொருத்துவதற்குக் கொண்டு செல்ல ரயில்வே அலுவலர்கள் முடிவு செய்துள்ளனர்.
இதையும் படிங்க:அருவியில் குளித்த இளைஞர்கள் மரணம்: உதகையில் உடலை மீட்க போராட்டம்