நீலகிரி மாவட்டத்தில் வழக்கத்தை விட அதிகமான மழை பெய்து வருகிறது. பகல் நேரங்களில் நல்ல வெயில் அடித்தாலும் இரவு நேரங்களில் கனமழை கொட்டி வருகிறது. இதனால் மாவட்டத்தில் உள்ள அனைத்து நீர் நிலைகளும் நிரம்பி உள்ளது.
தொடர்மழை காரணமாக உதகை அருகே உள்ள பைக்காரா மற்றும் கல்லட்டி நீர் வீழ்ச்சிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. பச்சைப் பசுமையான வனப்பகுதிக்குள் அமைந்துள்ள இந்த நீர் வீழ்ச்சிகளில் தண்ணீர் வெள்ளி உருகி கொட்டுவது போல காட்சியளிப்பதால் நீர் வீழ்ச்சியைக்காண சுற்றுலா பயணிகள் குவிந்து வருகின்றனர்.
குறிப்பாக சுமார் 200 அடி உயரம் கொண்ட கல்லட்டி நீர் வீழ்ச்சியானது கோடை காலத்தில் தண்ணீர் இன்றி வறண்டு காணப்பட்டது. பின்னர் ஜூன் மாதத்தில் பெய்த மழையால் குறைந்த அளவு தண்ணீர் மட்டுமே வந்தநிலையில் கனமழை காரணமாக கல்லட்டி ஆற்றில் வெள்ள பெருக்கு ஏற்பட்டு கல்லட்டி நீர் வீழ்ச்சியில் அதிகமான தண்ணீர் கொட்டுகிறது. இதனை கல்லட்டி மலைப்பாதை வழியாக உதகைக்கு வரும் சுற்றுலா பயணிகள் ஆர்வத்துடன் கண்டு ரசித்து செல்கின்றனர்.
இதையும் படிக்க: 'இறக்கையில் பழுது, நடுவானில் வட்டம், 123 பேர் உயிர்' - பரபரப்பான சென்னை விமான நிலையம்!