ETV Bharat / state

மதுபோதையில் அடுத்தவர் வீட்டுக்குள் நுழைந்தாரா முன்னாள் எம்பி?

நீலகிரியில் தீபாவளியன்று மதுபோதையில் நிர்வாணமாக அடுத்தவரின் வீட்டிற்குள் சென்றதாக கூறப்படும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கோபாலகிருஷ்ணன் மருத்துவமனையில் இருந்தவாறு வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

author img

By

Published : Nov 9, 2021, 11:10 AM IST

வீடியோ பதிவு வெளியிட்ட முன்னாள் எம்பி
வீடியோ பதிவு வெளியிட்ட முன்னாள் எம்பி

நீலகிரி: கடந்த அதிமுக ஆட்சியில் நீலகிரி தொகுதி நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த கோபாலகிருஷ்ணன் தீபாவளி பண்டிகையன்று மதுபோதையில் முத்தாலம்மன் பேட்டை பகுதியிலுள்ள கோபி என்பவரது வீட்டிற்குள் புகுந்ததாக கூறப்படுகிறது.

உடனடியாக அந்த வீட்டின் உரிமையாளர் கோபாலகிருஷ்ணனை சரமாரியாக தாக்கினார். பின்னர் அவர் நிர்வாணமாக இருப்பதை அவர்கள் வீடியோ பதிவு செய்துள்ளனர். இந்த வீடியோ அனைத்து ஊடகங்களிலும் வெளியானது. இதில், படுகாயமடைந்த ‌கோபாலகிருஷ்ணன் குன்னூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

வீடியோ பதிவு வெளியிட்ட முன்னாள் எம்பி

இது குறித்து இருவரையும் விசாரணை நடத்திய காவல் துறையினர் வீட்டிற்குள் குடிபோதையில் தகாத வார்த்தை பேசிய கோபாலகிருஷ்ணன் மீதும், தாக்குதல் நடத்திய வீட்டின் உரிமையாளர் கோபி மீதும் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

முன்னாள் எம்பி வீடியோ பதிவு

இந்நிலையில், மருத்துவமனையிலுள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கோபாலகிருஷ்ணன் வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “என் மீதும் கட்சி மீதும் பழி சுமத்துவதற்காகவே இது போன்று திட்டம் செய்துள்ளனர். கோபிக்கும் எனக்கும் முன்விரோதம் இருந்தால் என்னை வீட்டிற்குள் அழைத்து, அவரும் அவரது மகனும் சேர்ந்து என்னை தாக்கினர்.

எனது சட்டையைப் பிடித்து கிழித்துவிட்டு, பிறகு அதனை வீடியோவாக பதிவு செய்தனர். இந்த வீடியோவை ஊடகங்கள் வெளியிட்டுள்ளது. இதனால், என்னைத் தாக்கிய கோபி, அவரது மகன் உள்ளிட்டோர் மீது காவல் துறையினர் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என கேட்டுக்கொண்டார்.

இதையும் படிங்க: குடித்துவிட்டு அடுத்தவரின் வீட்டில் புகுந்த அதிமுக முன்னாள் எம்.பி.,க்கு அடி, உதை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.