நீலகிரி மாவட்டம் குன்னூர் பகுதியில் கடந்த சில தினங்களாக இரவு நேரங்களில் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக குன்னூரில் முக்கிய சுற்றுலாத்தலமாக விளங்கும் சிம்ஸ் பார்க், காட்டேரி பூங்கா ஆகிய இடங்களில் தண்ணீர் தேங்கி குளம் போல் காட்சியளிக்கிறது.
பூங்காவில் இரண்டாம் கட்ட சீசன் தற்போது ஆரம்பமாக உள்ள நிலையில், கனமழை காரணமாக பூக்களும் சேதமடைந்துள்ளது. மேலும், புல் தரைகளில் தண்ணீர் குளம்போல் தேங்கியுள்ளதால் தோட்டக்கலைத் துறை ஊழியர்கள் தண்ணீரை வெளியேற்றி வருகின்றனர்.
இந்நிலையில், புல்தரையில் சேறும், சகதியுமாக உள்ளதால் சுற்றுலாப் பயணிகள் அப்பகுதிக்குச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதன்காரணமாக பூங்காவிற்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் வெகுவாக குறைந்துள்ளது.
இதையும் படிங்க : பெண்ணின் நடனத்தை மெய்மறந்து ரசித்த ஆண் சிங்கம்! வைரல் காணொலி