நீலகிரி மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த ஒன்பது பேருடன் தொடர்பிலிருந்த ஊட்டி, குன்னூர், கோத்தகிரி பகுதிகளைச் சேர்ந்தவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வந்தனர்.
கோவை இஎஸ்ஐ மருத்துவமனையில் கரோனா வார்டில் சிகிச்சைப் பெற்றுவந்த ஒன்பது பேரில், எட்டு பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இந்நிலையில் தனிமைப்படுத்தப்பட்ட இடங்களை ஐஏஎஸ் அதிகாரி ஞானசேகரன், நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட ஆட்சியர் திவ்யா, “நீலகிரி மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த ஒன்பது பேரில், எட்டுப் பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். ஒருவர் மட்டுமே தற்போது சிகிச்சை பெற்று வருகிறார். கரோனாவை கட்டுப்படுத்தும் நோக்கில், தமிழ்நாடு அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்துவருகிறது.
மேலும் காவல்துறையினர், அங்கன்வாடி ஊழியர்கள், தூய்மைப் பணியாளர்கள், அரசு பணியாளர்கள் மற்றும் தீயணைப்புத் துறையினருக்கு வைட்டமின் மாத்திரைகள், கபசுர குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. கரோனா பாதிக்கப்படாத பகுதிகளில் படிப்படியாக ஊரடங்கு தளர்வுகளை மேற்கொள்ளும் வகையில் ஆய்வு மேற்கொள்ளப்படும். " என்றார்.
இதையும் பார்க்க: மத்தியக் குழுவுடன் முதலமைச்சர் பழனிசாமி ஆலோசனை...!