கரோனா வைரஸ் தாக்கம் குறித்து நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அதில், "கரோனா தொற்று காரணமாக தனிமைப்படுத்தியோர் எண்ணிக்கை குறைந்துவருகிறது.
தொடக்கத்தில் வெளிநாடுகளில் வந்தவர்கள் உள்பட 1471 பேர் தனிமைப்படுத்தி கண்காணித்தவந்த நிலையில் அவர்களின் 28 நாள் தனிமைக்காலம் முடிவடைந்துள்ளது.
தற்போது தனிமைபடுத்தியவர் எண்ணிக்கை குறைந்து 101 பேர் மட்டுமே உள்ளனர். இதனால், அடுத்த வாரம் நீலகிரி மாவட்டம் பச்சை மண்டலத்துக்குள் வந்துவிடும்" என நம்பிக்கையுடன் தெரிவித்தார்.
இதையும் படிங்க: அத்தியாவசிய நிறுவனங்களுக்கான அனுமதி - இணையத்தில் விண்ணப்பிக்க மாநகராட்சி அறிவுறுத்தல்!