ETV Bharat / state

'தேர்தல் பரப்புரை, பொதுக்கூட்டத்தில் முகக்கவசம் கட்டாயம்'- நீலகிரி ஆட்சியர் - Nilgiris Collector Innocent Divya

நீலகிரி மாவட்டத்தில் தேர்தல் பரப்புரை மற்றும் பொதுக் கூட்டத்தில் கலந்துகொள்ள வருபவர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் எனவும், மீறுபவர்கள் மீது பொது சுகாதார பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மாவட்ட ஆட்சித்தலைவர் இன்னசென்ட் திவ்யா எச்சரிக்கை விடுத்துள்ளார்.

innocent
innocent
author img

By

Published : Mar 23, 2021, 10:29 PM IST

நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக கரோனா பரவல் கட்டுக்குள் இருந்த நிலையில் கடந்த ஒரு வார காலமாக படிப்படியாக அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. குறிப்பாக நேற்று முன்தினம் (மார்ச் 21) கரோனா தொற்றால் ஒருவர் உயிரிழந்த நிலையில் நேற்று (மார்ச் 22) ஒரேநாளில் 16 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதனையடுத்து, உதகையில் உள்ள காவல் நிலையங்கள், அரசு அலுவலகங்களில் கிருமி நாசினி தெளிக்கும் பணிகள் இன்று (மார்ச் 23) முதல் மீண்டும் தொடங்கப்பட்டன. இதனிடையே, உதகையில் செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட ஆட்சித்தலைவர் இன்னசென்ட் திவ்யா," நீலகிரி மாவட்டத்தில் கரோனா தொற்று அதிகரித்து வருவதால் பொதுமக்களுடன் அதிக தொடர்பில் உள்ளவர்களுக்கு கரோனா தடுப்பூசி தொடர்ந்து செலுத்தபட்டு வருகிறது.

முகக் கவசம் அவசியம் - நீலகிரி ஆட்சியர்

மேலும், நீலகிரி மாவட்டத்திற்கு வரும் சுற்றுலாப் பயணிகள் கட்டாயமாக இணையளத்தில் பதிவு (இ-ரெஜிஸ்டேசன்) செய்ய வேண்டும். முகக்கவசம் அணிய வேண்டும். மாவட்டத்தில் கரோனா தொற்று அதிகரித்துவரும் நிலையில் முகக்கவசம் அணியாதவர்களை கண்காணிக்க 70 சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

நீலகிரி ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா

தேர்தல் சமயம் என்பதால் பரப்புரை, பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்ள வருபவர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும். இல்லாவிட்டால் பொது சுகாதார பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படுவதுடன் அபராதமும் விதிக்கப்படும்.

தற்போது, நீலகிரி மாவட்டத்தில் 89 பேர் கரோனா தொற்றால் பாதிக்கபட்டு சிகிச்சை பெற்று வருவகின்றனர்" என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க: 7 சாதிகளை உள்ளடக்கி தேவேந்திரகுல வேளாளராக இணைக்க மாநிலங்களவை ஒப்புதல்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.