ETV Bharat / state

சம்மருக்கு ஊட்டி போலாமா? மலை ரயிலின் சிறப்பு சேவை தயார்..!

author img

By

Published : Apr 15, 2023, 5:48 PM IST

Nilgiri Mountain Rail உதகையில் இருந்து குன்னூருக்கு சீசன் கால சிறப்பு மலை ரயில் மற்றும் மேட்டுப்பாளையம் முதல் உதகை வரை இயங்கும் சிறப்பு மலை ரயில் சேவை தொடங்கியது.

உதகை மலை ரயிலில் பயணிக்க ஆசையா? - சிறப்பு ரயில் சேவை தொடங்கியது!

உதகையில் இருந்து குன்னூருக்கு சீசன் கால சிறப்பு மலை ரயில் மற்றும் மேட்டுப்பாளையம் முதல் உதகை வரை இயங்கும் சிறப்பு மலை ரயில் சேவை தொடங்கியது

நீலகிரி: உதகையில் உள்ள சுற்றுலாத் தலங்களை கண்டு ரசிக்க தமிழ்நாட்டில் மட்டுமல்ல, வெளிமாநில மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளும் லட்சக்கணக்கில் வந்து செல்கின்றனர். இவ்வாறு சுற்றுலா வரும் பெரும்பாலானவர்களுக்கு, மலை ரயிலில் பயணம் செய்வதில் ஆர்வம் அதிகமாக இருப்பது உண்டு. ஆனால் டிக்கெட் கிடைக்காமல் போவதால், பல சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம் அடைந்து வந்தனர். இதனையடுத்து சீசனின்போது சிறப்பு மலை ரயிலை இயக்க சேலம் கோட்ட ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதன்படி, நீலகிரி சிறப்பு மலை ரயில் சேவை தொடங்கி உள்ளது.

இதன் அடிப்படையில், குன்னூரில் இருந்து கேத்தி, லவ்டேல் வழியாக உதகைக்கு சிறப்பு மலை ரயில் இயக்கம் தொடங்கியது. காலை 8.10 மணிக்கு குன்னூரில் இருந்து புறப்பட்டு, உதகைக்கு 9.40 மணிக்கு வந்தடையும். இந்த சிறப்பு மலை ரயில், 5 பெட்டிகள் உடன் இயக்கப்படுகிறது. அதேபோல் உதகையில் இருந்து மாலை 4.45 மணிக்கு மலை ரயில் புறப்பட்டு, 5.55 மணிக்கு குன்னூருக்கு வந்து சேரும். இதில் முதல் வகுப்பு கட்டணமாக 630 ரூபாயும், 2ஆம் வகுப்பு கட்டணமாக 465 ரூபாயும் வசூல் செய்யப்படுகிறது.

இது தவிர, உதகையில் இருந்து கேத்திக்கு காலை 9.45, 11.30 மற்றும் பிற்பகல் 3 மணிக்கும், கேத்தியில் இருந்து உதகைக்கு காலை 10.10, பிற்பகல் 12.10 மற்றும் மாலை 3.30 மணிக்கும் சிறப்பு மலை ரயில் சேவை தொடங்கப்பட்டுள்ளது. இந்த சேவை, ஜூன் 26ஆம் தேதி வரை இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் சனிக்கிழமை மேட்டுப்பாளையத்தில் இருந்து சிறப்பு மலை ரயில், காலை 9.10 மணிக்கு புறப்பட்டு, உதகைக்கு 2.25 மணிக்கு வந்தடையும்.

அதேபோல் உதகையில் இருந்து ஞாயிற்றுக்கிழமை காலை 11.25 மணிக்கு புறப்பட்டு, மாலை 4.20 மணிக்கு மேட்டுப்பாளையம் சென்றடையும். இதற்கு இடையே சிறப்பு ரயில் சேவை அல்லாது, மேட்டுப்பாளையத்தில் இருந்து உதகைக்கு காலை 7.10 மணிக்கு வழக்கமாக இயங்கும் மலை ரயிலும், பிற்பகல் உதகையில் இருந்து 2.15 மணிக்கு இயங்கும் மலை ரயில் சேவையும் பயன்பாட்டில் உள்ளது.

மேலும் புகழ் பெற்ற 125வது ஊட்டி மலர் கண்காட்சி வருகிற மே 19ஆம் தேதி தொடங்கி 23ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. அதேபோல் காய்கறி கண்காட்சி மே 6 மற்றும் 7ஆம் தேதியும், ரோஜா கண்காட்சி மே 13, 14 மற்றும் 15 ஆகிய தேதிகளிலும் நடைபெற உள்ளது.

இதையும் படிங்க: குன்னூர் சிம்ஸ் பூங்காவில் சுற்றுலா பயணிகளை தேனீக்கள் கொட்டியதில் மூவர் காயம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.