ETV Bharat / state

Special: அதிசய வெள்ளை பாம்பு!-மேற்குதொடர்ச்சி மலையில் கண்டறியப்பட்டது

மேற்குத்தொடர்ச்சி மலையில் உள்ள நீலகிரி மாவட்டத்தில் வெண்மை நிறத்தில் பாம்பு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

வெள்ளை நிறத்தில் பாம்பு! முதன் முதலாக கண்டறியப்பட்ட அல்பினிசம் பாம்பு!

author img

By

Published : May 13, 2022, 10:43 PM IST

Updated : May 14, 2022, 10:01 AM IST

சென்னை: மேற்குத்தொடர்ச்சி மலையில் உள்ள நீலகிரி மாவட்டத்தில் இதுவரை காணப்படாத வெண்மை நிறத்தில் பாம்பு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது அல்பினிசம் (தோலின் நிறம் வெண்மையாக மாறப்பட்ட) வகையைச் சார்ந்ததாக ஆய்வின் இறுதியில் கண்டறியப்பட்டுள்ளது.

இந்த பாம்பினைக் கண்டுபிடித்த ஆராய்ச்சியாளர்களின் கூற்றுப்படி, அல்பினிசம் என்பது ஒரு உயிரினத்தின் தோல் வெண்மையாக மாறிவிடுவதாகும். மேலும், அல்பினிசம் என்பது மரபியல் ரீதியாக ஏற்படும் குறைபாடு என்று தெரிவித்தனர். குறைபாடு குறித்த காரணத்தை விளக்கிய ஆராய்ச்சியாளர்கள், "வனப்பகுதிகள் துண்டாக்கப்படுவதன் காரணமாக வன உயிரினங்கள் தனிமைப்படுத்தப்படுகிறது. எனவே நெருக்கமான உயிரினங்களுக்கிடையே ஏற்படும் இனப்பெருக்கம் (inbreeding) போன்ற காரணங்களால் இது போன்ற குறைபாடு ஏற்படுகிறது", எனத் தெரிவித்தனர்.

முதன் முதலாக கண்டறியப்பட்ட அல்பினிசம் பாம்பு

மேலும் இந்த அரிய வகை பாம்பானது உதகமண்டலத்திற்கு அருகே உள்ள வனப்பகுதியை ஒட்டியுள்ள ஷோலூர் என்ற கிராமத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. "இந்த பாம்பானது விஷமற்றது. மேலும் இந்த பாம்புகள் பெரும்பாலும் மண், கல், இலைகளின் இடுக்குகளில் வாழ்ந்து கொண்டு மண்புழு மற்றும் சிறிய உயிரினங்களை மட்டுமே உணவாக உண்ணக்கூடிய ஒரு உயிரினமாகும். இந்த அரிய வகை பாம்பானது உதகமண்டலத்திற்கு அருகே உள்ள வனப்பகுதியை ஒட்டியுள்ள ஷோலூர் என்ற கிராமத்தில் கண்டுபிடிக்கப்பட்டது", என ஒரு ஆராய்ச்சியாளர் தெரிவித்தார்.

வெள்ளை நிறத்திலான  பாம்பு
வெள்ளை நிறத்திலான பாம்பு

உதவிப்பேராசிரியர் பி. கண்ணன், ஊர்வன மற்றும் இருவாழ்விகள் குறித்த ஆராய்ச்சியாளர், திரு.வி.க அரசு கலைக்கல்லூரி, திருவாரூர், கூறுகையில், "இந்த வகை பாம்பானது மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியை சார்ந்த நீலகிரி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் காணப்படக்கூடிய அரிய வகை பாம்பாகும். இந்த பாம்பானது அந்த குறிப்பிட்ட சுற்றுச்சூழலுக்கு மட்டுமே காணப்படக்கூடிய பாம்பு. இதனுடைய கழுத்துப்பகுதி சற்று சிறிதாக இருக்கும்" என்று கூறிய அவர் இந்த பாம்பு “மரப்பாம்பு” என்றும் கூட அழைக்கப்படும். மேற்குத்தொடர்ச்சி மலையின் தென் பகுதியில் மட்டுமே காணப்படக்கூடியது என்றார்.

இந்த அரிய வகை பாம்புகளை பற்றிய ஆராய்ச்சிகள் மிகவும் குறைவு எனவும் பாம்பின் வடிவம் உருளையாக காணப்படும் என விளக்கினார். இதனுடைய தலை சிறியதாகவும் மூக்கு சற்று கூர்மையாகவும், முதுகுப்புற செதில்கள் வழுவழுப்பாகவும், குறுகிய வாளைக்கொண்டதாகவும் இருக்கும். பொதுவாக இந்த பாம்பானது ஈரமுள்ள பகுதிகளில், தேயிலை தோட்டங்கள், மனிதர்கள் வாழும் இடங்களில் காணலாம். மேலும் கோடிட்ட குறுகிய தலை பாம்பு போன்ற உள்ளூர் இனங்களின் வாழ்விடங்கள் மற்றும் நடத்தைகளைப் புரிந்துகொள்வது மேற்குத் தொடர்ச்சி மலைகளில் உள்ள முக்கிய வனவிலங்குகளின் வாழ்விடங்கள் மற்றும் நிலப்பரப்புகளைப் பாதுகாப்பதற்கான வழியை சுட்டிக்காட்டுகிறது எனவும் குறிப்பிட்டார்.

இது குறித்து வனம் சந்திரசேகர் பேசுகையில், "இந்த அரிய வகை பாம்பானது நீலகிரி மாவட்டத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் வனத்துறை காடுகளை முழுமையாக பாதுகாக்க எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்க முயற்சிக்கவில்லை என்பது வருத்தமான ஒன்றாகும். வனப்பகுதிகளை முழுமையாக பாதுகாக்க நடவடிக்கை எடுத்திருந்தால் இந்த பாம்பினை கிராமப்புறங்களில் கண்டுபிடித்திருக்க முடியாது. தமிழக அரசு மேற்குத் தொடர்ச்சி மலைகளை ஒட்டியுள்ள வனப்பகுதிகளை பாதுகாக்க ஒருங்கிணைந்த முயற்சி மேற்கொள்ள வேண்டும்” என வலியுறுத்தினார். இது குறித்து வன அதிகாரி ஒருவர் கூறுகையில், “ அறிவியல் பூர்வமாக இந்த பாம்பு அல்பினிசம் என்னும் வகையைச் சார்ந்தது என்று கண்டறியப்பட்டு மாவட்ட வன அலுவலர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் அறிவுரைப்படி கண்டுபிடிக்கப்பட்ட இந்த பாம்பினை திரும்ப காட்டுப்பகுதியில் விடப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார்.இதையும் படிங்க : ஒடிசாவில் கண்டுபிடிக்கப்பட்ட அரிய வகை மஞ்சள் நிற ஆமை

Last Updated : May 14, 2022, 10:01 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.