தமிழ்நாடு முழுவதும் தற்போது பிளாஸ்டிக் பயன்பாட்டிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அந்தவகையில் வனவிலங்குகள், இயற்கை பாதிப்பையொட்டி நீலகிரியிலும் பிளாஸ்டிக் தடை விதித்து அமலில் உள்ளது.
ஏற்கனவே நகராட்சி சார்பில் சேகரித்த மூன்றாயிரம் டன் பிளாஸ்டிக்குகளை பிரிக்கும் பணி நடந்துவருகிறது. இந்த பிளாஸ்டிக்குகளை வைத்து முதல் முறையாக நீலகிரி மாவட்டத்தில், இயற்கை சீற்றத்தால் மண்சரிவு, நிலச்சரிவு ஏற்படும்போது பிளாஸ்டிக் கான்கிரீட் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
தற்போது அதற்கான நவீன இயந்திரங்கள் பஞ்சாப் மாநிலத்தில் இருந்து வரவழைக்கப்பட்டு பொருத்தும் பணி தொடங்கியுள்ளது. ஏற்கனவே பிளாஸ்டிக் சாலை அமலில் உள்ள நிலையில், பிளாஸ்டிக் கான்கிரீட்களும் வருங்காலத்தில் உபயோகமாக இருக்கும் என்று இதன் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.