நீலகிரி: பகல் கோடுமந்து பகுதியில் செயல்பட்டுவரும் சூழல் மேம்பாட்டுக் குழுவினால் சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன. இந்தக் குழுவானது வனத் துறையுடன் இணைந்து பழங்குடி மக்களின் வாழ்வாதாரத்தைப் பெருக்க வழிசெய்கின்றது.
இங்கு வசிக்கும் தோடர் பழங்குடியின மக்கள், தங்கள் பாரம்பரிய முறைப்படி இயற்கையை தெய்வமாக வழிபடுகின்றனர். இந்நிலையில் அருகில் உள்ள கிராமங்களில் வசிக்கும் பழங்குடி குழந்தைகளுக்கு, சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் செயல்களில் சுற்றுச்சூழல் மேம்பாட்டுக் குழு ஈடுபட்டுள்ளது.
விழிப்புணர்வின் காரணமாக தற்போது பழங்குடி குழந்தைகளே மரக்கன்றுகளை நடவுசெய்து, அதனைப் பராமரித்துவருவது இயற்கை ஆர்வலர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: கீழ்பவானி வாய்க்கால் - நீர் திறப்பு 1000 கன அடியாக அதிகரிப்பு!