நீலகிரி: தமிழ்நாடு எங்கும் இஸ்லாமியர்கள் பக்ரித் பண்டிகையை கொண்டாடி வரும் சூழலில் நீலகிரி மாவட்டத்திலும் பக்ரீத் பண்டிகை வெகு விமரிசையாக இன்று (ஜூன் 29) கொண்டாடப்பட்டது. முன்னதாக, உதகையில் உள்ள பெரிய பள்ளிவாசல், குன்னூர் கோத்தகிரியில் உள்ள பள்ளிவாசல்களில் சிறப்புத் தொழுகை நடைபெற்றது. குன்னூர் கீழ் பள்ளிவாசலில் இருந்து புறப்பட்ட இஸ்லாமியர்கள் மூர்ஸ் கார்டன் பகுதியில் அமைந்துள்ள ஈத்கா மைதானத்தில் பக்ரீத் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர்.
இதில், இமாம் வாசிம் அக்ரம் மஸாஹிரி, காஜி முஜீபுர்ரஹ்மான் காஸிமி, முஃப்தி வாசிம் ஹசனி, நிமதுல்லாஹ் தாவூதி, அப்பாஸ் இம்தாதி, அப்சல் பாகவி, முஹம்மது மழாஹிரி, ஜஹாங்கீர் உலூமி, உள்ளிட்ட பல முக்கிய இமாம்கள் மற்றும் அனைத்து பள்ளிவாசல் நிர்வாகிகளும், உறுப்பினர்களும் கலந்து கொண்டு சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர். பிறகு ஒருவருக்கொருவர் ஆரத்தழுவி பக்ரீத் வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டனர். தங்களது முன்னோர்களின் அடக்க ஸ்தலங்களுக்குச் சென்று பிராத்தனை செய்தனர். இதனைத்தொடர்ந்து, வசதி குறைந்தவர்களுக்கு இறைச்சி உள்ளிட்ட விருந்தோம்பல் நிகழ்வு நடைபெற்றது.
இதையும் படிங்க: திருப்பூர் அருகே விவசாய நிலத்தில் துணை மின் நிலையம் அமைக்க எதிர்ப்பு... 47 நாட்களாக தொடரும் போராட்டம் தீர்வு என்ன?
நீலகிரி: குன்னூர் பகுதியானது பணங்கள் சூழ்ந்த பகுதியாகும். இங்கே கரடி, காட்டெருமை, சிறுத்தை, யானை உள்ளிட்ட வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன. மேலும், உணவு மற்றும் குடிநீருக்காக அவ்வப்போது குடியிருப்பு பகுதியில் படையெடுக்கின்றன. இதன் காரணமாக, மனித விலங்கு மோதல் ஏற்படுவதுடன் வனவிலங்குகள் தாக்கி உயிரிழப்புகளும் ஏற்படுவது தொடர்கதையாகவே உள்ளது.
இந்த நிலையில், குன்னூர் அருகே உள்ள பேரட்டி பகுதியில் 300-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன இப்பகுதியில் பகல் நேரங்களில் கரடிகள் சர்வ சாதாரணமாக கிராமப் பகுதியில் நுழைவதும் அப்பகுதியில் உள்ள கடைகள் வீடுகளின் உள்ள உணவுப் பொருட்களை சேதப்படுத்தி வருகிறது. இதன் காரணமாக, தேயிலை தோட்ட தொழிலாளர்கள் பணிக்கு செல்ல முடியாமல் வீட்டிலேயே முடங்கி கிடக்கின்றனர்.
ஆகவே, இங்கு சுற்றித் திரியும் ஒற்றை கரடியை வனத்துறையினர் கூண்டு வைத்துப் பிடித்து அடர்ந்த வனப்பகுதியில் விட வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்நிலையில் குன்னூர் வனத்துறையினர் கரடியைத் தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இரவு முழுவதும் கரடி சுற்றித் திரியும் பகுதிகளில் தீமூட்டி கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கரடி அப்பகுதியில் கண்டறியப்பட்டால், உடனடியாக கூண்டு வைத்து பிடித்து அடர்ந்த வனப்பகுதியில் விட்டுவிடுவதாக வனத்துறையினர் பொதுமக்களுக்கு உறுதி அளித்து வருகின்றனர். இருப்பினும், அப்பகுதி மக்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர்.
இதையும் படிங்க: Chidambaram Natarajar Temple: கனகசபையில் பக்தர்கள் ஏறுவதை தடுக்கக் கோரி மனு..