நீலகிரி: சென்னை வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் பராமரிக்கபட்டு வரும் 11 சிங்கங்களுக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு கரோனா தொற்று உறுதி செய்யபட்டது. அதில் நீலா என்ற பெண் சிங்கம் உயிரிழந்தது.
இது வனத்துறையினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில். தமிழ்நாடு வனத்துறை கட்டுபாட்டில் உள்ள வளர்ப்பு யானைகளுக்கும் கரோனா தொற்று பரவி உள்ளாதா என்பதை கண்டறிய வனத்துறை அமைச்சர் கா.ராமசந்திரன் உத்தரவிட்டார்.
அதனையடுத்து முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள 6 பெண் யானைகள், ஒரு மக்னா யானை, 21 ஆண் யானைகள் என மொத்தம் 28 யானைகளுக்கு கடந்த 8ஆம் தேதி கரோனா தொற்று பரிசோதனை மேற்கொள்ளபட்டது.
முதுமலை புலிகள் காப்பக கால்நடை மருத்துவர் ராஜேஷ்குமார் தலைமையில் வனத்துறையினர் யானைகளின் தும்பிக்கையிலிருந்து சளி மாதிரிகளைச் சேகரித்தனர். சேகரிக்கப்பட்ட அந்த மாதிரிகள் அனைத்தும் உத்தர பிரதேசத்தில் உள்ள வன உயிரியல் ஆய்வு மையத்திக்கு அனுப்பி வைக்ப்பட்டது.
இந்நிலையில் இன்று (ஜூன்.12) அதன் முடிவுகள் வெளியானது. அதில் முதுமலையில் உள்ள எந்த யானைக்கும் கரோனா பாதிப்பு இல்லை என உறுதியாகியுள்ளது.
இதையும் படிங்க: திருச்சி அருகே 6 யானைகளுக்கு கரோனா பரிசோதனை