குன்னுார்- மேட்டுப்பாளையம் இடையிலான புதிதாக சீரமைக்கப்பட்ட ரன்னிமேடு ரயில் நிலையத்தை மத்திய ரயில்வேத் துறை உறுப்பினர் ராஜேஷ் அகர்வால் திறந்து வைத்தார். அப்போது செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், மலை ரயில் தனியார் மயமாக்கப்படாது. அதுபோல் திறமையான ஆட்களை கொண்டு மலை ரயில் சேவை நன்றாக இயக்கப்பட்டு வருகிறது.
மேலும் உலக யுனஸ்கோ அங்கீகரம் பெற்றுள்ள 120ஆண்டு பழமை வாய்ந்த மலை ரயில் சேவை ஆசியாவிலேயே குன்னுாரில் மட்டும் தான் இயக்கப்படுகிறது. மேலும் ஜப்பான், இந்தோனேசியா போன்ற நாடுகளில் மலை ரயில் சேவை நிறுத்தப்பட்டு உள்ளது. ஆனால் நம் நாட்டில் மலை ரயில் சேவை இயக்கப்படுவது பெருமைக்குரிய விஷயம் என்றார்.
இதனைத் தொடர்ந்து குன்னுார் ரயில் நிலையத்தில் தென்னக இரயில்வே நிர்வாகமும், மத்திய தபால் துறையும் இணைந்து நீலகிரி மலை ரயில் குறித்த தபால் தலையை மத்திய ரயில்வே துறை உறுப்பினர் ராஜேஷ் அகர்வால் மற்றும் மேற்கு தபால் துறை இயக்குநர் திருமதி. சீலிபர்மன் ஆகியோர் வெளியிட்டனர்.