நீலகிரி மாவட்டம் பந்தலூர் தாலுகா நாயக்கன் சோலை பகுதியில், உணவிற்காக 7 யானைகள் வனப்பகுதியில் உலா வந்துள்ளன. அப்போது, யானைகளுக்கு இடையே ஏற்பட்ட சண்டையினால் அங்கிருந்த குட்டியானை ஒன்று பள்ளத்தில் தவறி விழுந்து பரிதாபமாக உயிரிழந்தது. இரவு முழுவதும் அப்பகுதியில் யானைகளின் சத்தம் கேட்டதாக அப்பகுதி கிராம மக்கள் வனத்துறையினரிடம் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து, சம்பவ இடத்திற்குச் சென்ற வனத்துறை, குட்டியானை இறந்து கிடப்பதையும் தாய் யானை யாரையும் நெருங்க விடாமல் நிற்பதையும் பார்த்து உயர் அலுவலர்களுக்குத் தகவல் அளித்தனர்.
பின்னர், யானையை விரட்டி விட்டு இறந்த குட்டியானையைப் பிரேதப் பரிசோதனை செய்வதற்காக வனத்துறையினர் எடுத்த நடவடிக்கை தோல்வியில் தான் முடிந்தது. காலை முதல் வனத்துறையினர் பட்டாசுகளை வெடித்து யானையை விரட்டும் நடவடிக்கையைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், " குட்டிக்காகப் பாசப் போராட்டம் நடத்திவரும் யானையின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது" எனத் தெரிவித்தனர்
இதையும் படிங்க: பயன்படாத பொருட்களினால் கைவினைப்பொருட்கள் செய்து அசத்திய மாணவர்கள்!