நீலகிரி மாவட்டத்தில் ஒன்பது பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டு கோவையில் உள்ள இஎஸ்ஐ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தற்போது அவர்களின் குடியிருப்பு பகுதிகளை சுற்றி சீல் வைக்கபட்டு 19 ஆயிரம் வீடுகள் கண்காணிக்கபட்டு வருகின்றன. மேலும் 1,332 பேர் தனிமைபடுத்தபட்டிருந்த நிலையில் அதன் எண்ணிக்கை 213ஆக குறைந்துள்ளது.
இந்நிலையில் சளி, காய்ச்சல் உள்ளவர்களுக்கு கரோனா தொற்று உள்ளதா? என்பதைக் கண்டறிய மாதிரிகளை சேகரிக்கும் நடமாடும் பரிசோதனை மையம் தொடங்கப்பட்டுள்ளது. உதகையைச் சார்ந்த தொண்டு நிறுவனம் அதற்கான ஆய்வு மையத்தை வடிவமைத்து மாவட்ட நிர்வாகத்திற்கு வழங்கி உள்ளது.
அந்த நடமாடும் மையத்தை மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா பார்வையிட்டு தொடங்கி வைத்தார். அப்போது அவர் இந்த மையம் அனைத்து மலை கிராமங்களுக்கும் சென்று மாதிரிகளை சேகரித்து பரிசோதனை செய்ய பயன்படுத்தப்படும் எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: கரோனா சிறப்பு சிகிச்சை மையம் தொடங்க கிராம மக்கள் எதிர்ப்பு