ETV Bharat / state

ஜப்பான் நாட்டு உதவியுடன் ரூ.984 கோடிக்கு மரம் நடும் திட்டம்! - அமைச்சர் கா.ராமச்சந்திரன் - Coonoor News

ஜப்பான் நாட்டு உதவியுடன் தமிழ்நாட்டில் ரூ.984 கோடி மதிப்பில் ஐந்து ஆண்டு மரம் நடும் திட்டம் மேற்கொள்ளப்பட உள்ளதாக வனத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் கூறினார்.

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Dec 3, 2022, 10:19 AM IST

நீலகிரி: குன்னூர் தேசிய மாணவர் படையின் 75வது ஆண்டையொட்டி நேற்று (டிச.2) நடந்த பேரணியை தமிழ்நாடு வனத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் தொடங்கி வைத்து உரையாற்றினார். அப்போது பேசிய அவர், 'கரோனா காலத்தில் ஆக்சிஜன் தட்டுப்பாட்டினால் ஏராளமானோர் மரணம் அடைந்ததை கருத்தில் கொண்டு, ஆக்ஸிஜன் தட்டுபாட்டை குறைக்க அதிகளவு மரங்களை வளர்க்கவேண்டும். அதற்கான மாபெரும் பணிகளை, தமிழ்நாட்டில் 'பசுமை இயக்கம்' மேற்கொண்டு வருகிறது.

தேசிய மாணவர் படை சமுதாயத்தில் உள்ள மக்களுக்கு பல தரப்பட்ட சேவைகளை மேற்கொண்டு வருவது பாராட்டுதலுக்குறியது என்றார். தமிழகத்தில் உள்ள 30 லட்சம் ச.கி.மீ நிலப்பரப்பில் 23.7 % பரப்பில் மட்டும் மரங்கள் உள்ளன. இதை தேசிய இலக்கான 33 சதவீதமாக அதிகரிக்க பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.

ஜப்பான் நாட்டு உதவியுடன் ரூ.984 கோடிக்கு மரம் நடும் திட்டம்! - அமைச்சர் கா.ராமச்சந்திரன்

ஆரோக்கியமான சுற்றுசூழலை ஏற்படுத்த அரசு மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு ஒத்துழைப்பு அளிக்கும் வகையில் தேசிய மாணவர் படை மாணவர்கள் தங்களது பிறந்த நாள் மற்றும் முக்கிய நிகழ்வுகளில் தங்களது சொந்தமான இடத்திலோ (அ) கோவில் நிலங்களிலோ மரம் நட முன்வர வேண்டும்' என்றும் கேட்டுக்கொண்டார். மேலும், ஜப்பான் நாட்டு உதவியுடன் தமிழ்நாட்டில் ரூ.984 கோடி மதிப்பில் ஐந்து ஆண்டு மரம் நடும் திட்டம் மேற்கொள்ளப்பட உள்ளது' என கூறினார்.

தேசிய மாணவர் படையில் இணைந்து சமுதாயத்தில் சேவை செய்வதில் மிகவும் பெருமையாக கருதுவதாகவும்; குறிப்பாக, 75வது ஆண்டு நிகழ்வில் பங்கேற்று செயல்படுவது எங்களுக்கு கிடைத்த அரிய வாய்ப்பு என்று நிகழ்ச்சியில் பங்கேற்ற மாணவிகள் தெரிவித்தனர்.

இதையும் படிங்க: தமிழகத்தின் அனைத்து சிறைகளிலும் நூலக வசதி - தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.