நீலகிரி: 1971 ஆம் ஆணடு டிசம்பர் 16ஆம் தேதி நடந்த இந்திய - பாகிஸ்தான் இடையோன போரில் சுமார் 93ஆயிரம் பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் இந்திய ராணுவத்திடம் சரணடைந்து வங்காள தேசம் உருவாக காரணமான இந்த வெற்றி "விஜய் திவாஸ்" என்ற பெயரில் ஒவ்வொரு ஆண்டும் இந்திய ராணுவத்தால் வெகு சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
அதனை வலுவுறுத்தி வகையில் நீலகிரி மாவட்டம் குன்னுார் வெலிங்டன் ராணுவ பயிற்சி மையத்தில் மினி மாரத்தான் போட்டிகளை மெட்ராஸ் ரெஜிமென்டல் சென்டர் கமாண்டன்ட் பிரிகேடியர் சுனில் குமார் யாதவ் கொடியசைத்து நேற்று தொடங்கிவைத்தார்.
இப்போட்டியானது 5. கீ.மீ., மற்றும் 10 கீ.மீ., ஒட்டம் என இரு பிரிவுகளாக நடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு மெட்ராஸ் ரெஜிமென்ட் சென்டர் கமான்டன்ட் பரிசுகளை வழங்கினார்.
இதையும் படிங்க:ரயில் பயணிகளை அச்சுறுத்தும் நாய்கள் - நடவடிக்கை எடுக்க பயணிகள் கோரிக்கை