தமிழ்நாட்டில் கரோனா தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக 50க்கும் குறைவாக தொற்று ஏற்பட்ட நிலையில் தற்போது தினமும் நூற்றுக்கும் மேற்பட்டோர் பாதிப்படைகின்றனர். இவர்களுக்கு குன்னூர் அரசு மருத்துவமனை, ஊட்டி அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இந்நிலையில் குன்னூர் வெலிங்டன் ராணுவ கன்டோன்மென்ட் வாரிய பகுதியிலும் கரோனா பாதிப்பு அதிகரித்துவருகிறது. இதற்காக கன்டோன்மென்ட் வாரிய மருத்துவமனையை கரோனா வார்டாக மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதனால் இங்கு வரும் புற நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க கன்டோன்மென்ட் வாரிய மேல்நிலைப் பள்ளியை மருத்துவமனையாக மாற்றவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதற்காக பள்ளியின் வகுப்பறைகளை மருத்துவர் அறை, மருந்து அறை, செவிலி அறைகளாக மாற்றும் பணிகள் நடந்துவருகின்றன.
இதையும் படிங்க: கரோனா மருந்துக்கு ஜிஎஸ்டி வரி - ராகுல் கண்டனம்!