நீலகிரி: காந்தியடிகளின் 152ஆவது பிறந்தநாளை முன்னிட்டு குன்னூர் தனியார் மகளிர் கல்லூரியில் உதகை ஆவணக்காப்பகம் மூலமாகப் புகைப்படக் கண்காட்சி நடைபெற்றது.
இதில் 152 காந்தியின் சிறிய வயது முதல் இறப்பு வரையிலான புகைப்படங்கள் இடம்பெற்றிருந்தன. சுமார் 500-க்கும் மேற்பட்ட மாணவிகள் இக்கண்காட்சியைக் கண்டு ரசித்தனர்.
மேலும் காந்தியுடன் சர்தார் வல்லபாய் பட்டேல், சுபாஷ் சந்திரபோஸ், நேரு, இந்திரா காந்தி உள்ளிட்ட பல தலைவர்களின் படங்களும் இடம்பெற்றிருந்தன.
தற்போது மொபைல் போன் திரைகளை மட்டுமே கண்டுவரும் அனைவருக்கும் இதுபோன்ற கண்காட்சிகளைக் கண்டு ரசிப்பது மிகவும் மகிழ்ச்சி அளிப்பதாக மாணவிகள் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: பணவீக்கம் - கிலோ உப்பு 130 ரூபாய்