ETV Bharat / state

9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டம்! - அபராதம் விதிப்பு

நீலகிரி: ஆன்லைனில் அபராதம் விதிப்பதை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் டிசம்பர் 27ஆம் தேதி முதல் கால வரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக லாரி உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டம் அறிவிப்பு

author img

By

Published : Dec 22, 2020, 6:34 PM IST

நீலகிரி மாவட்ட லாரி உரிமையாளர்கள் சங்கத்தின் ஆலோசனை கூட்டம் உதகையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

லாரி உரிமையாளர்கள் சந்திக்கும் சிக்கல்கள்

நிகழ்வுக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சங்கத்தலைவர் நடராஜன்,” நீலகிரி மாவட்டத்தில் 2 ஆயிரத்து 700 லாரிகள் உள்ளன. அவற்றை இயக்குவது பெரும் சவாலாக உள்ளது. லாரிகளுக்கு வட்டார போக்குவரத்து துறை அலுவலர்கள் குறிப்பிடும் நிறுவனத்திடம் தான் வேகக்கட்டுபாட்டு கருவி, ஸ்டிக்கர்களை வாங்கி பயன்படுத்த வேண்டும் என கட்டாயபடுத்துகின்றனர். இதனால் செலவினம் அதிகரிக்கிறது” என்றார்.

அபராதம் விதிப்பு

காவல் துறையினர் லாரிகளுக்கு ஆன்லைன் மூலம் அபராதம் விதிப்பதை நிறுத்த வேண்டும். ஆன்லைனில் ஆபராதம் விதிக்கும்போது லாரி ஓட்டுநர் தலைக்கவசம் அணியவில்லை என்று குறிப்பிட்டு அபராதம் விதிக்கிறனர். இது வேடிக்கையாக இருக்கிறது என சங்கத்தலைவர் நடராஜன் குற்றஞ்சாட்டினார்.

வேகக் கட்டுபாட்டு கருவி

வாகனங்களுக்கு வேகக் கட்டுபாட்டு கருவியை பொறுத்த சென்னை உயர் நீதிமன்றம் விதித்துள்ள தீர்ப்பை தமிழ்நாடு அரசு நடைமுறைபடுத்த வேண்டும்.

கரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள தங்களுக்கு காலாண்டு வரியை ரத்து செய்ய வேண்டும், ஆன்லைன் அபராத முறையை ரத்து செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை அவர் வலியுறுத்தினார்.

லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டம் அறிவிப்பு

வரும் 27ஆம் தேதி காலை முதல் காலைவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடப் போவதாகவும் அவர் தெரிவித்தார்.

இதனால் மலை காய்கறி ஏற்றுமதி மற்றும் தேயிலை தூள் ஏற்றுமதி கடுமையாக பாதிக்கபடும் நிலை ஏற்படும்.

இதையும் படிங்க:லாரி உரிமையாளர்களுடன் தமிழ்நாடு அரசு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் - விக்கிரமராஜா

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.