கரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழ்நாடு அரசு பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக தளர்வுகளுடன் ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
எனினும் தொற்று பாதிப்பு அதிகம் உள்ள கோவை, நீலகிரி, திருப்பூர், உள்ளிட்ட 11 மாவட்டங்களில் தளர்வுகளில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
குறிப்பாக நீலகிரி மாவட்டத்திற்கு இ-பாஸ் கட்டாயம் என அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, இ-பாஸ் இல்லாத வாகனங்கள் மாவட்டத்திற்குள் அனுமதிக்கப்படவில்லை. மளிகை, காய்கறி கடைகள் திறக்கப்படும் என அறிவித்தபோதும், தொற்று பாதிப்பு அதிகமாக உள்ளதால் உதகை மார்க்கெட் வியாபாரிகள் கடைகளை திறக்கவில்லை.
ஆங்காங்கே ஒரு சில கடைகள் மட்டும் திறந்துள்ளன. மொத்த இறைச்சிக் கடை வியாபாரிகளும் கடைகளை திறக்கவில்லை. காய்கறிகள் வழக்கம்போல் மக்கள் வசிக்கும் இடத்திற்கே கொண்டு சென்று விற்பனை செய்யப்படுகிறது.
இதையும் படிங்க: ஊரடங்கு தளர்வு - காய்கறிகளின் விலை குறைய வாய்ப்பு!