நீலகிரி: கூடலூர், சேரம்பாடி பகுதியில் தனியார் காஃபி தோட்டத்தில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு சுருக்கு கம்பியில் சிக்கிய 5 வயது மதிக்கத்தக்க பெண் சிறுத்தையை மீட்ட வனத்துறையினர் அதனை முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள வன கால்நடை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.
கடந்த இரண்டு நாட்களாக, முதுமலை வன கால்நடை மருத்துவமனையில் சிறுத்தைக்குப் பல்வேறு சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வந்த நிலையில் நேற்று (அக்.3) நள்ளிரவு சிகிச்சைப் பலனின்றி சிறுத்தை பரிதாபமாக உயிரிழந்தது.
இதையடுத்து சுருக்கு வயரின் காயம், நீரிழப்பு, சோர்வு, மன அழுத்தம் ஆகிய ஒருங்கிணைந்த காரணிகளே சிறுத்தையின் உயிரிழப்புக்குக் காரணமாக இருக்கலாம் என வனத்துறை தெரிவித்துள்ளது. சிறுத்தை இறந்த சம்பவம் தொடர்பாக காஃபித் தோட்ட உரிமையாளர் தலைமறைவான நிலையில், மற்றொருவரை வனத்துறையினர் கைது செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: சுருக்குக் கம்பியில் சிக்கிய சிறுத்தை உயிரிழப்பு: இருவர் கைது