நீலகிரி: (Coonoor Highway damaged): நீலகிரி மாவட்டம், குன்னூர்-மேட்டுப்பாளையம் சாலையில் விரிவாக்கப் பணிகள் நடைபெற்று வருகிறது.
இப்பணிக்காக மொத்தம் 17 இடங்களில் சாலையில் பணி நடக்கிறது. இதனையடுத்து காட்டேரி பூங்காவின் அருகே விரிவாக்கப் பணி நடைபெற்றபோது சாலையில் திடீரென விரிசல் ஏற்பட்டது.
கனரக வாகனங்களுக்கு மாற்றுப்பாதை
இதனால், இரு சக்கர வாகனங்கள் மற்றும் கார்கள் உள்ளிட்ட இலகுரக வாகனங்கள் தவிர, அரசுப் பேருந்துகள், காய்கறி, கட்டுமானப் பொருட்கள் ஏற்றி வரும் கனரக வாகனங்கள், பாதுகாப்பு கருதி கோத்தகிரி வழியாக ஒரு வழிப்பாதையில் மாற்றவிடப்பட்டுள்ளன.
மேலும் தேசிய நெடுஞ்சாலைத்துறையினர் இப்பகுதியில் விரைவாகப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். பணிகள் நிறைவேறும் பட்சத்தில் வழக்கம்போல் வாகனங்கள் இச்சாலையில் இயங்கும் என நெடுஞ்சாலைத் துறையினர் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க:Cheating case against PT Usha: பி.டி.உஷா மீது மோசடி வழக்கு