ETV Bharat / state

இளம் பெண்ணின் சிகிச்சைக்காக கால்பந்து போட்டி நடத்திய கோத்தகிரி கிராம மக்கள்!

நீலகிரி மாவட்டம், கடைகம்பட்டி கிராமத்தில் இளம் பெண் மருத்துவ செலவிற்காக இளைஞர்கள் சார்பில் கால்பந்து போட்டி நடத்தப்பட்டது.

Medical fund football
கால்பந்து போட்டி
author img

By

Published : Jun 25, 2023, 11:07 PM IST

Updated : Jun 27, 2023, 3:28 PM IST

இளம் பெண்ணின் சிகிச்சைக்காக கால்பந்து போட்டி நடத்திய கோத்தகிரி கிராம மக்கள்!

நீலகிரி: கோத்தகிரி அருகே கடைகம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் அஸ்வினி.திருமணமான இவருக்கு, சமீபத்தில் இரண்டு சிறுநீரகங்களும் செயலிழந்திருப்பதை மருத்துவர்கள் உறுதி செய்துள்ளனர்.இவர் ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்தவர். மேலும்,இவர் தனது சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கு முயற்சி செய்துவரும் நிலையில்,பண நெருக்கடியால் அவரின் குடும்பம் தவித்து வந்திருக்கிறது.மேலும் இவர் கோவை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.இதையறிந்த கிராம மக்கள்,பல்வேறு வழிகளில் சிகிச்சைக்கான நிதி திரட்ட முடிவு செய்துள்ளனர்.

இதன் ஒரு பகுதியாக, கடைகம்பட்டி பாரதி இளைஞர் மன்றம் சார்பில் மாவட்ட அளவிலான கால்பந்து போட்டிகள் நடத்தப்பட்டன.இதன் மூலம் கிடைக்கும் நிதியினை அஸ்வினியின் சிகிச்சைக்கு அளிக்க முடிவு செய்தனர்.கடந்த வாரம் கால்பந்து போட்டிகளைத் தொடங்கினர்.மொத்தம் 16 போட்டிகள் நடத்தப்பட்டது.ஒரு வாரமாகக் கால்பந்துப் போட்டிகள் நடைபெற்றுவந்த நிலையில், கட்டபெட்டு, உயிலட்டி ஆகிய அணிகளுக்கு இடையே இறுதிப் போட்டி நடைபெற்றது.

விறுவிறுப்பாக நடைப்பெற்று வந்த கால்பந்து போட்டியின் ஆட்ட நேரத்தில் யாரும் கோல் அடிக்காததால், டைபிரேக்கர் முறையில் கட்டபெட்டு அணி வெற்றி பெற்றது என அறிவிக்கப்பட்டது.வெற்றி பெற்ற அணிக்குக் கோப்பை வழங்கப்பட்டது.ஊர் காரியதசி ரமேஷ் வரவேற்றார் எட்டூர் தலைவர் ஹாலகவுடர் தலைமை வகித்தார்.19 ஊர் தலைவர் ராமாகவுடர், கம்பட்டி நாட்டாமை கண்ணப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதன் மூலம் பாரதி இளைஞர் மன்றம் சார்பில் நடத்தப்பட்ட கால்பந்து போட்டியின் மூலம் வசூலிக்கப்பட்ட 4 லட்சம் நிதி அஸ்வினியின் மருத்துவச் சிகிச்சைக்காகக் கோவை தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.இறுதிப் போட்டியில் வென்ற கட்டபெட்டு அணியும் தங்களுக்கு வழங்கப்படவிருந்த நிதியினை அஸ்வினியின் மருத்துவச் செலவிற்கு வழங்கினர்.

சிறப்பு விருந்தினராக காவிலேரை பீமன், ஹில் போர்ட் தாளாளர் ரவிக்குமார், நீலகிரி மாவட்ட கால்பந்து கழக துணைத் தலைவர் கோபால கிருஷ்ணன்,காங்கிரஸ் கட்சியின் மாநில சிறுபான்மை பிரிவு துணைத் தலைவர் ஜே.பி.அஷ்ரப் அலி மற்றும் ராம்சந்த் வியாபாரிகள் சங்கத் தலைவர் லியாகத் அலி, கோத்தகிரி வட்டார காங்கிரஸ் தலைவர் சில்லபாபு மற்றும் கிராம தலைவர்கள் பொதுமக்கள் ஆகியோர் கலந்துகொண்டு கால்பந்து போட்டியைச் சிறப்பாக நடத்தினர்.ஒரு இளம் பெண்ணின் சிகிச்சைக்காக ஊரே திரண்டு நடத்தும் முதல் கால்பந்து போட்டியாகும்.

இது குறித்து கிராம மக்கள் கூறும் போது, "இளம்பெண்ணின் சிறுநீரகச் செயலிழப்பு மற்றும் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்குப் பணமின்றி அவரின் குடும்பத்தினர் தவித்து வந்தனர்.அவருடைய இந்த நிலை,எங்களைச் சோகத்தில் ஆழ்த்தியது‌.அவருக்கு எப்படியாவது உதவ வேண்டும் என்ற நோக்கத்தில் சுற்றியுள்ள ஊர் தலைவர்கள் கலந்தாலோசித்து கால்பந்து போட்டிகள் மூலமாக நிதி திரட்ட முடிவு செய்தோம்’’ என்று தெரிவித்தனர்.

இதையும் படிங்க:கொள்ளை அடிக்க முடியாத ஆத்திரத்தில் டாஸ்மாக் பாருக்கு தீ வைத்த நபர்கள்!

Last Updated : Jun 27, 2023, 3:28 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.