ETV Bharat / state

கோடநாடு வழக்கு செப். 2 ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு - etv bharat

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கை செப்டம்பர் 2 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உதகை மாவட்ட அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கோடநாடு வழக்கு செப். 2 ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு

author img

By

Published : Aug 27, 2021, 4:18 PM IST

Updated : Aug 27, 2021, 5:45 PM IST

நீலகிரி: முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் தொடர்பு இருப்பதாக முக்கிய குற்றவாளியான சயான் மற்றும் விபத்தில் உயிரிழந்த கனகராஜின் அண்ணன் தனபால் ஆகியோர் கூறியிருந்தனர். இந்த வழக்கில் கூடுதல் விசாரணை தேவையுள்ளது என நீதிமன்றத்தில் தெரிவித்த நீலகிரி காவல் துறையினர், சயானை விசாரணைக்கு ஆஜராகுமாறு சம்மன் அனுப்பினர்.

இதையடுத்து கடந்த 17ஆம் தேதி ஆஜரான சயானிடம் 3 மணி நேரம் காவல் துறையினர் விசாரணை நடத்தினர். இதையடுத்து கடந்த 24ஆம் தேதி விபத்தில் உயிரிழந்த கனகராஜ் அண்ணன் தனபாலிடம் ஒரு மணி நேரம் விசாரணை நடத்தினர். இதனால் வழக்கு விசாரணை தீவிரமடைந்துள்ளது.

கோடநாடு வழக்கு விசாரணை இன்று (ஆக.27) உதகை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்றது. சயன், தனபால் ஆகியோரிடம் காவல் துறையினர் நடத்திய விசாரணைக்கு பின் நடைபெறும் முதல் நீதிமன்ற விசாரணை என்பதால் புதிய திருப்பங்கள் ஏற்படும் என எதிர்பார்க்கப்பட்டது. சயான் காவல் துறையினரிடம் அளித்த வாக்குமூலம் தொடர்பான அறிக்கை தாக்கல் செய்யப்படும், கூடுதல் நபர்களிடம் விசாரணை நடத்த அனுமதி கோரப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.

கோடநாடு வழக்கு செப். 2 ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு

சயான் ஆஜர்

வழக்கு விசாரணைக்கு முதல் நபராக சயான் நீதிமன்றத்திற்கு வந்தார். சயான் நீதிமன்றத்திற்குள் நுழையும் முன்பாக, நீதிமன்ற வளாகத்தில் உள்ள விநாயகர் கோயிலில் வழிபட்டு சென்றார். அரசுத் தரப்பு சிறப்பு வழக்கறிஞர்களான ஷாஜகான், கனகராஜ் ஆகியோர் நீதிமன்றத்திற்கு வந்தனர். உதகை மாவட்ட அமர்வு நீதிமன்ற நீதிபதி சஞ்சய் பாபா முன்னிலையில் வழக்கு விசாரணை நடைபெற்றது.

விசாரணையின்போது அனுபப் ரவி என்ற சாட்சி தரப்பு வழக்கறிஞர் ஆனந்த கிருஷ்ணன், "கூடுதல் விசாரணைக்கு தடை விதிக்க வேண்டுமென உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளோம். அந்த வழக்கு நிலுவையில் உள்ளபோது, விசாரணை நடைபெறக்கூடாது" என வாதாடினார். அப்போது குற்றவாளிகள் தரப்பு வழக்கறிஞர்கள் ஷாஜகான் மற்றும் கனகராஜ் ஆகியோர் வழக்கிற்கு சம்பந்தமே இல்லாதவர்கள் இங்கு வாதம் செய்யக்கூடாது என தெரிவித்தனர்.

வழக்கறிஞர்கள் ரவுடிகள் போல பேசக்கூடாது

இதனால் வழக்கறிஞர்கள் இடையே காரசார வாதம் நடைபெற்றது. அப்போது அதிமுக தரப்பு வழக்கறிஞர்கள் ரவுடிகள் போல பேசக்கூடாது என கூறியதால், வாதம் முற்றியது.

இதையடுத்து நீதிபதி சஞ்சய் பாபா குறுக்கிட்டு, வெளியில் பேசுவதுபோல நீதிமன்றத்தில் பேசக்கூடாது. நீதிமன்றத்திற்கு ஒரு மாண்பு உள்ளது எனக்கூறி இரு தரப்பினரையும் சமாதானப்படுத்தினர்.

கூடுதல் விசாரணைக்கு தடை கேட்டு தாக்கல் செய்யப்பட்ட வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதால், வழக்கு விசாரணையை ஒத்தி வைக்க வேண்டுமென அரசு தரப்பு வழக்கறிஞர் கோரிக்கை வைத்தார். இதனை ஏற்று வழக்கின் மீதான விசாரணை செப்டம்பர் 2 ஆம் தேதி நீதிபதி சஞ்சய் பாபா ஒத்தி வைத்தார்.

வழக்கு செப். 2 ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு

கோடநாடு வழக்கில் சாட்சிய விசாரணையில் விடுபட்ட தடவியல் நிபுணர் ராஜாகோபால், கோத்தகிரி மின்வாரிய பொறியாளர் மற்றும் கோடநாடு பங்களா மேலாளர் நடராஜன் ஆகியோரை விசாரிக்க வேண்டுமென குற்றவாளிகள் தரப்பு வழக்கறிஞர் விஜயன் கோரிக்கை வைத்தார். அதனை ஏற்ற நீதிபதி செப்டம்பர் 2 ஆம் தேதி முதல் விசாரிக்க அனுமதி அளித்து உத்தரவிட்டார். அதேசமயம் சயான் வாக்குமூலம் தொடர்பான அறிக்கை இன்று நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படவில்லை.

இதுகுறித்து அரசு தரப்பு வழக்கறிஞர் ஷாஜகான் கூறுகையில், "கோடநாடு வழக்கு சம்பந்தமாக சாட்சி அனுபவ் ரவி சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு மீதான உத்தரவு பிறப்பிக்கப்படவுள்ளதால் அது வரைக்கும் உதகையில் நடக்கும் விசாரணை ஒத்திவைக்க கோரிக்கை முன்வைத்தோம். அனுபவ் ரவி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் வாதத்தை முன்வைக்க முற்பட்டபோது, எதிர்தரப்பு வழக்கறிஞர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் நீதிமன்றத்தில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இருதரப்பு வாக்குவாதத்தை நீதிபதி குறுக்கீட்டு சமாதானப்படுத்தினார். இந்த வழக்கை செப்டம்பர் 2 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

எதிர்தரப்பு வழக்கறிஞர் விஜயன் கூறுகையில், " கோடநாடு வழக்கு சாட்சி விசாரணையில் விடுபட்ட தடவியல் நிபுணர் ராஜகோபால், கோத்தகிரி மின்வாரியா பொறியாளர் மற்றும் பங்களா மேலாளர் நடராஜன் ஆகியோரை விசாரிக்க நீதிபதி அனுமதி வழங்கியுள்ளார். செப்டம்பர் 2 ஆம் தேதியில் இருந்து எதிர்தரப்பு சாட்சியங்களை ஆஜர்படுத்தி விசாரணை மேற்கொள்ள வாய்ப்பு உள்ளது" என்றார்.

இதையும் படிங்க: பேரறிவாளனுக்கு மேலும் ஒரு மாதம் பரோல் நீட்டிப்பு

Last Updated : Aug 27, 2021, 5:45 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.