நீலகிரி : கரோனா பரவல் காரணமாக ஊரடங்கு பிறப்பித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. இதனால் பலர் தங்களது வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகின்றன.தமிழ்நாடு அரசும் மக்களுக்கு நிதி உதவியுடன் ரேஷன் பொருட்களையும் வழங்கி வருகிறது.
நீலகிரி மாவட்டத்தில் கரோனா தொற்றை எதிர்க்க உடலுக்கு நோய் எதிர்ப்பு தரும் நான்கு லட்சம் ஆர்சனிக் மாத்திரைகள், ஒரு லட்சம் பேருக்கு கபசுர குடிநீர் வழங்கப்பட்டுள்ளது. சிறிய அளவில் கரோனோ பாதித்தவர்களுக்கு ஆயுஸ் 64 மாத்திரைகள் வழங்கப்பட்டுள்ளது.
தினமும் 8 ஆயிரம் பேருக்கு உணவு வழங்கப்படுகிறது. கரோனா பாதிப்பால் மாவட்டத்தில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ள பகுதிகளில் சேவா கேந்திரா நிர்வாகிகள், களபணியாளர்கள் மக்களுக்கு தேவையான உதவிகளை செய்து வருகின்றனர்.
இந்நிலையில் நீலகிரி மாவட்ட நுழைவாயிலான பர்லியார் சோதனைச் சாவடியில் சேவா கேந்திரம், சேவா பாரதி சார்பில், வெளிமாவட்டத்தில் இருந்து வருபவர்கள், வாகன ஓட்டுநர்கள், பர்லியார் பகுதி மக்களுக்கு கபசுர குடிநீர், ஆர்செனிக் ஆல்பம் மருந்து வழங்கப்பட்டு வருகிறது.
இதையும் படிங்க: பள்ளிகளுக்கு புத்தகம் அனுப்ப உத்தரவு; மாணவர் சேர்க்கை எப்போது?