ETV Bharat / state

இந்திய வரலாறு பல பெண் வீரர்களின் புகழ்பெற்ற பாரம்பரியத்தைக் கொண்டுள்ளது- குடியரசு துணைத்தலைவர் பேச்சு

வெலிங்டன் ராணுவப் பயிற்சி மையத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் பேசிய குடியரசு துணைத்தலைவர் , ‘வாழ்க்கையின் ஒவ்வொரு துறையிலும் பெண்களுக்கு சம வாய்ப்புகளை வழங்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட வேண்டும் என்பது எனது உறுதியான நம்பிக்கை’ , எனக் கூறியுள்ளார்.

இந்தியா வரலாற்றில் பெண் வீரர்களின் புகழ்பெற்ற பாரம்பரியத்தைக் கொண்டுள்ளது- வெங்கையா நாயுடு பேச்சு

author img

By

Published : May 17, 2022, 7:44 PM IST

Updated : May 17, 2022, 7:59 PM IST

நீலகிரி: குடியரசு துணைத்தலைவர் வெங்கையா நாயுடு குன்னூர் வெலிங்டன் ராணுவப் பயிற்சி கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.

அப்பொழுது பேசிய அவர், ’இன்று உங்கள் அனைவரின் மத்தியிலும் நான் இங்கு இருப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். நாட்டின் மிகப் பழமையான மற்றும் மிகவும் மதிப்புமிக்க முப்படைகளின் பயிற்சி டிஃபென்ஸ் சர்வீசஸ் ஸ்டாஃப் காலேஜ் (DSSC) வெலிங்டனில் உள்ளது என்பதை நான் அறிவேன். 275 ஆண்டுகளுக்கும் மேலான புகழ்பெற்ற வரலாற்றைக் கொண்ட மெட்ராஸ் ரெஜிமென்ட்டின் (Madras Regimental Centre) அலுவலர்கள் மற்றும் வீரர்களை உங்களிடையே பார்ப்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்.

இன்று, இந்தியா மிகவும் சிக்கலான மற்றும் கணிக்க முடியாத புவி-அரசியல் சூழலில் பல பாதுகாப்பு சவால்களை எதிர்கொள்கிறது. வெளியிலும் உள்ளேயும் இருந்து சமச்சீர் மற்றும் சமச்சீரற்ற அச்சுறுத்தல்களை நாங்கள் எதிர்கொள்கிறோம். விரோத சக்திகளால் இந்தியாவின் இறையாண்மைக்கு சவால் விடும் எந்தவொரு முயற்சியும் நமது பாதுகாப்புப் படைகளால் கடுமையாக எதிர்கொள்ளப்படும் என்று தேசம் நம்புகிறது.

இன்று போர்கள் போர்க்களங்களில் மட்டும் நடத்தப்படுவதில்லை. மோதல்களின் கலப்பினத்தன்மையானது, இந்நிலைப் போரில் வெற்றியாளர் அல்லது தோல்வியாளர்களைத் தீர்மானிப்பதை கடினமாக்குகிறது. தகவல் மற்றும் இணையப் போர், ட்ரோன்கள் மற்றும் ரோபோட்டிக்ஸ் மற்றும் விண்வெளி அடிப்படையிலான போர் முறைகள் அதிகரித்து வருகின்றன.

ஆயுதப்படைகள் கர்வத்திற்குரிய அமைப்புகளில் ஒன்று: எனவே, நமது பாதுகாப்புத் துறை இந்த புதிய மற்றும் வளர்ந்து வரும் மோதல் பகுதிகளில் கவனம் செலுத்தி திறன்களை மேம்படுத்த வேண்டும். இந்திய ராணுவத்தை 'எதிர்கால சக்தியாக' வளர்ப்பதே நமது எண்ணமாகவும் திட்டமாகவும் இருக்க வேண்டும். நம் நாட்டின் ஆயுதப் படைகள் நமது கர்வத்துக்குரிய அமைப்புகளில் ஒன்றாகும்.

சமீபத்தில், நான் ஹரித்வாரில் உள்ள ஒரு பல்கலைக்கழகத்திற்குச் சென்றிருந்தேன். அங்கு அவர்கள் பரம்வீர் சக்ரா விருது பெற்றவர்களின் படங்கள் மற்றும் விளக்கங்களால் அலங்கரிக்கப்பட்ட ‘வீரர்களின் சுவற்றைக்’ கட்டியுள்ளனர். நமது இளைய தலைமுறையினரிடம் தேசபக்தியையும், நமது ராணுவத்தின் மீதான மரியாதையையும் ஊட்டுவதற்கு இதுபோன்ற நினைவுச் சின்னங்கள் மற்ற கல்வி நிறுவனங்களிலும் அமைக்கப்பட வேண்டும்.

குடியரசு துணைத்தலைவர் பேச்சு வெங்கையா நாயுடு

ராணி வேலுநாச்சியாரை நினைவு கூர்ந்த குடியரசு துணைத்தலைவர்: இந்திய வரலாறு பல பெண் வீரர்களின் புகழ்பெற்ற பாரம்பரியத்தைக் கொண்டுள்ளது. கோண்ட்வானாவின் ராணி துர்காவதி, துளுவ ராணி ராணி அப்பாக்கா, ருத்ரமா தேவி, கிட்டூர் சென்னமா, ராணி வேலு நாச்சியார், லக்ஷ்மிபாய் மற்றும் பேகம் ஹஸ்ரத் மஹால் ஆகியோர் தங்கள் எதிரிகளிடமிருந்தும் பாராட்டுகளைப் பெற்ற சிறந்த ராணுவத் தளபதிகளின் ஒளிரும் எடுத்துகாட்டுகள்.

சேவைகளில் பெண்களுக்கு அதிகாரம் அளிக்கும் வகையில் பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்பதைக் குறிப்பிடுவது மகிழ்ச்சி அளிக்கிறது. விமானப்படையின் போர் விமானங்கள், கடற்படைக் கப்பல்கள், ராணுவக் காவல் படை மற்றும் வெளிநாடுகளில் உள்ள தூதரகங்களில் பெண் அலுவலர்கள் பணியமர்த்தப்படுவதைக் கண்டு நான் மகிழ்ச்சியடைகிறேன். வாழ்க்கையின் ஒவ்வொரு துறையிலும் பெண்களுக்கு சம வாய்ப்புகளை வழங்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட வேண்டும் என்பது எனது உறுதியான நம்பிக்கை’ எனப் பேசினார்.

இதையும் படிங்க: உயர்கல்விக்கு பொற்காலத்தை அளிக்கும் அரசு திமுக- மு.க. ஸ்டாலின்

Last Updated : May 17, 2022, 7:59 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.