நீலகிரி மாவட்டத்தில், 65 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தேயிலை விவசாயம் செய்து வருகின்றனர். இங்கு விளையும் பசுந்தேயிலை நூற்றுக்கும் மேற்பட்ட தொழிற்சாலைகளில் உற்பத்தி செய்யப்படுகிறது.
இந்தத் தேயிலைத்தூள் குன்னூரிலுள்ள தேயிலை ஏல மையத்தில் ஏலம் விடப்பட்டு, நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு விற்பனைக்காக அனுப்பப்பட்டு வருகிறது. தற்போது கரோனா பாதிப்பு காரணமாக, வட மாநிலங்களில் தேயிலை உற்பத்தி வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.
இதனால், வட மாநிலத்தவர்கள் குன்னூர் தேயிலை ஏல மையத்தில் அதிகளவில் நாடி வருகின்றனர். இதுவரை இல்லாத அளவு தற்போதைய 16 ஆவது ஏலத்தில் 93 விழுக்காடு அளவில் தேயிலைத்தூள் விற்பனை ஆகியுள்ளது.
நீலகிரி தேயிலை தூளில் எதிர்ப்பு சக்தி அதிகமுள்ளது என்கிற நம்பிக்கை சர்வதேச அளவில் நுகர்வோர் இடையே உள்ளதால், ஏற்றுமதிக்கும் வர்த்தகர்கள் அதிகளவில் முன்வந்துள்ளனர். விவசாயிகள், வர்த்தகர்கள், தேயிலை உற்பத்தியாளர்கள் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: தேயிலை தோட்ட தொழிற்சாலைகளுக்கு நோட்டீஸ்!