ETV Bharat / state

குப்பைகளைக் கொளுத்துவதால் கரோனா வைரஸ் தாக்கம் அதிகரிக்கும்?

author img

By

Published : Feb 2, 2020, 7:36 AM IST

நீலகிரி: குப்பைகளைக் கொளுத்துவதால் கரோனா வைரஸ் தாக்கம் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது என தமிழ்நாடு பசுமைத் தீர்ப்பாயத்தின் தலைவர் ஜோதிமணி தெரிவித்தார்.

தமிழ்நாடு பசுமை தீர்பாயத்தின் தலைவர் ஜோதிமணி பேட்டி
தமிழ்நாடு பசுமை தீர்பாயத்தின் தலைவர் ஜோதிமணி பேட்டி

நீலகிரி மாவட்டம் உதகையில் தனியார் தொண்டு நிறுவனம் சார்பாக திடக்கழிவு மேலாண்மை பயிற்சி முகாம் நடைபெற்றது. இதில் ஊராக உள்ளாட்சித் தேர்தலில் வெற்றிபெற்ற 35 ஊராட்சி மன்றத் தலைவர்கள், துணைத் தலைவர்கள், உள்ளாட்சித் துறை அலுவலர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

முகாமில் மனிதக் கழிவுகள் மூலம் இயற்கை உரம் தயாரிப்பது குறித்தும், அந்த உரத்தை பயன்படுத்தி விவசாயம் செய்வது குறித்தும் பயிற்சியளிக்கப்பட்டது. மேலும், திடக்கழிவு மேலாண்மை குறித்து பயிற்சி அளிக்கபட்டது. இந்தப் பயிற்சி முகாமை தமிழ்நாடு பசுமை தீர்ப்பாயத்தின் தலைவரும் முன்னாள் உயர் நீதிமன்ற நீதிபதியுமான ஜோதிமணி கலந்துகொண்டு தொடங்கிவைத்தார்.

தமிழ்நாடு பசுமைத் தீர்ப்பாயத்தின் தலைவர் ஜோதிமணி பேட்டி

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், "அனைத்து மாநிலங்களிலும் குப்பைகளை மக்கும் குப்பை, மக்காத குப்பை எனத் தனித்தனியாகப் பிரித்து தர வேண்டும். அவ்வாறு செய்யாதவர்களுக்கு அபராதம் விதிக்க நடவடிக்கை எடுக்கப்படும். ஆனால் அபராதம் விதிப்பதை முழு வீச்சில் இன்னும் செயல்படுத்தவில்லை, ஓராண்டு காலத்திற்குப் பின்னர் இத்திட்டத்தை மக்கள் கடைப்பிடிக்கவில்லை என்றால் அதன் பின்னர் அபராதம் கட்டாயமாக விதிக்க உத்தரவிடப்படும்" என்றார்.

மேலும், குப்பைகளைக் கொளுத்துவதால் தற்போது வேகமாகப் பரவிவரும் கரோனா வைரஸ் தாக்கம் அதிகரிக்க வாய்ப்புகள் உள்ளது. கேரளாவிலிருந்து தமிழ்நாட்டிற்கு மருத்துவக் கழிவுகள் கொண்டுவந்து கொட்டப்படுவதைக் கண்காணிக்க உத்தரவிடபட்டுள்ளதாகத் தெரிவித்த அவர் மருத்துவக் கழிவுகள் கொட்டுபவர்களைக் கண்காணிக்காத காவல் துறையினர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் உறுதிபடத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: தீவிர மருத்துவக் கண்காணிப்பில் சீனாவிலிருந்து வந்த மாணவர்கள்’

Intro:OotyBody:
உதகை 01-02-20
குப்பைகளை கொளுத்துவதும், மருத்துவ கழிவுகளை பொதுவெளியில் கொட்டுவதும் தண்டணைக்குரிய குற்றம் எனவும் குப்பைகளை கொளுத்துவதால் கரோனா வைரஸ் தாக்கம் அதிகரிக்கவும் வாய்ப்பு உள்ளது எனவும் தமிழக பசுமை தீர்பாயத்தின் தலைவர் ஜோதிமணி உதகையில் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்….
நீலகிரி மாவட்டம் உதகையில் தனியார் தொண்டு நிறுவனம் சார்பாக திடக்கழிவு மேலாண்மை பயிற்சி முகாம் நடைபெற்றது. இதில் ஊராக உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற 35 ஊராட்சிமன்ற தலைவர்கள் மற்றும் துணை தலைவர்களும், உள்ளாட்சி துறை அதிகாரிகளும் கலந்து கொண்டனர். அதில் மனித கழிவுகள் மூலம் இயற்கை உரம் தயாரிப்பது குறித்தும், அந்த உரத்தை பயன்படுத்தி விவசாயம் செய்வது குறித்தும் பயிற்சி அளிக்கபடுகிறது. மேலும் திடக்கழிவு மேலாண்மை குறித்து பயிற்சி அளிக்கபட்டது. இந்த பயிற்சி முகாமை தமிழக பசுமை தீர்பாயத்தின் தலைவரும் முன்னாள் உயர் நீதிமன்ற நீதிபதியுமான ஜோதிமணி கலந்து கொண்டு தொடங்கி வைத்தார்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய ஜோதிமணி அனைத்து மாநிலங்களிலும் குப்பைகளை மக்கும் குப்பை, மக்காத குப்பை என தனிதனியாக பிரித்து தர வேண்டும் என கேட்டு கொண்டுள்ளதாகவும் அவ்வாறு செய்யாதவர்களுக்கு அபராதம் விதிக்க நடவடிக்கை எடுக்கபட்டு வருவதாகவும் கூறினார். ஆனால் அபராதம் விதிப்பதை முழு வீச்சில் இன்னும் செயல்படுத்தவில்லை என்ற அவர் ஓராண்டு காலத்திற்கு பின்னர் இத்திட்டத்தை மக்கள் கடைபிடிக்கவில்லை என்றால் அதன் பின்னர் அபராதம் கட்டாயமாக விதிக்க உத்தரவிடபடும் என்றார். மேலும் குப்பைகளை கொளுத்துவதும், மருத்துவ கழிவுகளை பொது இடங்களில் கொட்டுவதும் தண்டனைக்குரிய குற்றம் என்ற அவர் குப்பைகளை கொளுத்துவதால் தற்போது வேகமாக பரவி வரும் கரோனா வைரஸ் தாக்கம் அதிகரிக்க வாய்ப்புகள் உள்ளது என்றார். கேரளாவில் இருந்து தமிழகத்திற்கு மருத்துவ கழிவுகள் கொண்டு வந்து கொட்டபடுவதை கண்காணிக்க உத்தரவிடபட்டுள்ளதாக தெரிவித்த அவர் மாவட்ட காவல்துறையினர் அதனை கண்காணிக்க வேண்டும் என தமிழக காவல்துறை தலைவர் அனைத்து மாவட்ட காவல்துறையினருக்கு உத்தரவிட்டுள்ளதாகவும் எனவே மருத்துவ கழிவுகள் கொட்டுபவர்களை கண்காணிக்காத காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிடபடும் என்றார்.
பேட்டி: ஜோதிமணி - தமிழக பசுமை தீர்பாயத்தின் தலைவர்
Conclusion:Ooty

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.