ETV Bharat / state

பழங்குடியின பெண்கள் நடத்தும் பெட்ரோல் பங்க் திறப்பு! - பழங்குடி பெண்கள் நடத்தும் பெட்ரோல் பங்க்

பழங்குடியின ஆராய்ச்சி மையம் மேற்கொண்ட முயற்சியால், தமிழ்நாட்டில் முதல் பழங்குடி பெண்கள் நடத்தும் பெட்ரோல் பங்க் உதகையில் திறக்கப்பட்டுள்ளது.

பழங்குடியின பெண்கள் நடத்தும் பெட்ரோல் பங்க் திறப்பு!
பழங்குடியின பெண்கள் நடத்தும் பெட்ரோல் பங்க் திறப்பு!trol
author img

By

Published : Jul 1, 2021, 6:49 AM IST

நீலகிரி: அழிவின் விளிம்பில் உள்ள கோத்தர், தோடர், இருளர், குரும்பர், காட்டு நாயக்கர் மற்றும் பணியர் ஆகிய ஆறு பழங்குடியின மக்கள் வசித்து வருகின்றனர். இதில் தோடர், கோத்தர் இன மக்களிடம் நிலங்கள், வேலை வாய்ப்புகள் உள்ளதால் சமீப காலங்கலாக இவர்கள் வாழ்வில் முன்னேற்றம் அடைந்துள்ளனர். ஆனால் இருளர், பனியர், குறும்பர், காட்டு நாயக்கர் ஆகிய பிற பழங்குடியின மக்கள் சுதந்திரம் பெற்று 70 ஆண்டுகளாகியும் போதிய முன்னேற்றம் அடையமல் இன்றளவும் வனப்பகுதி, வனத்தை ஒட்டியுள்ள பகுதிகளில் தான் வாழ்ந்து வருகின்றனர்.

வாழ்வாதாரத்தை மேம்படுத்த நடவடிக்கை

இவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த ஒன்றிய, மாநில அரசுகள், மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. குறிப்பாக விவசாய கடன், விவசாய உபகரணம், கைவினை பொருட்கள் அங்காடி என அனைத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த உதகையில் செயல்பட்டு வரும் பழங்குடியின ஆராய்ச்சி மையம் குறிப்பாக பெண்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த புதிய நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

பழங்குடியின பெண்கள் நடத்தும் பெட்ரோல் பங்க் திறப்பு!

இதன் ஒரு பகுதியாக உதகை அருகே உள்ள பாலாடா என்னும் கிராமத்தில் அமைந்துள்ள பழங்குடியின ஆராய்ச்சி மையத்தின் அருகே புதிய பெட்ரோல் பங்க் திறக்கப்பட்டுள்ளது. ஒன்றிய பழங்குடியின நல அமைச்சகம், மாநில ஆதிதிராவிடர், பழங்குடியினர் நலத்துறை சார்பில் பழங்குடியின மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த இத்திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

பழங்குடியின பெண்கள் நடத்தும் பெட்ரோல் பங்க்

இந்த பெட்ரேல் பங்கை பழங்குடியின பெண்கள் நடத்தி வருகின்றனர். தமிழ்நாட்டிலேயே பழங்குடியின பெண்கள் நடத்தும் முதல் பெட்ரோல் பங்க் இதுவாகும். நீலகிரி மாவட்டத்தில் உள்ள 6 பழங்குடியின மக்களை உள்ளடக்கி இது நடத்தப்படுகிறது.

ஊரடங்கு காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக கணவர்கள், குடும்ப தலைவர்களுக்கு முறையாக வேலை இல்லை மற்றும் வீட்டில் வருமானம் இன்றி தவித்த பெண்களுக்கு பெட்ரோல் பங்க் பணியால் வேலை இருப்பது மட்டுமல்லாமல், குடும்ப வருவாய்க்கு பெரிதும் உதவுவதாக அங்கு பணியாற்றும் பெண்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் வெகு தூரத்தில் இருந்து வருபவர்களுக்கு விடுதி வசதியும் ஏற்படுத்தி தரப்பட்டுள்ளது. இவர்களுக்கு 8 மணி நேர பணி. 8 மணி நேரத்துக்கு மேல் பணி செய்தால், ஊக்கத்தொகையும் வழங்கப்படுகிறது. இவர்களுக்கு மாதந்தோறும் ரூ.8500 முதல் 10 ஆயிரம் மற்றும் 3 சதவீத அகவிலைப்படி வழங்கப்படுகிறது. ஊதியம் மற்றும் ஊக்கத்தொகை வங்கி கணக்கில் வரவு வைக்கப்படுகிறது.

பாலாடா சுற்று வட்டாரப்பகுதிகளில் ஏராளமான விவசாய நிலங்கள் உள்ளதால், விளைப் பொருட்களை எடுத்து செல்லும் லாரி, ஜீப் ஆகிய வாகனங்கள் இங்கு பெட்ரோல், டீசல் நிரப்புகின்றனர். இந்த பங்க் ஊராட்சி பகுதியில் உள்ளதால் லிட்டருக்கு 87 பைசா குறைவாக பெட்ரோல் கிடைப்பதாலும் பழங்குடியின பெண்கள் மட்டும் நடத்துவதாலும் நீலகிரி மாவட்டத்தில் பெரும் வரவேற்ப்பை பெற்றுள்ளது.

இதையும் படிங்க: பழங்குடி பெண்ணுக்கு பிரசவம் பார்த்த ஆம்புலன்சில் ஓட்டுநர், மருத்துவ உதவியாளர்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.