நீலகிரி மாவட்டம் குன்னூர் சுற்றுப்புற பகுதிகளில் அதிகளவில் காட்டேஜ், பங்களாக்கள் அமைந்துள்ளன. இவைகள் பல, வெளி மாவட்டங்கள், மாநிலங்களை சேர்ந்த நபர்களுக்கு சொந்தமாக உள்ளன.
கரோனா சுகாதார நெருக்கடிக்கு மத்தியில் அவர்கள் நீலகிரி, குன்னூர் வருகின்றனர். இந்நிலையில், சமீபத்தில் சென்னையிலிருந்து நடிகர் ராதாரவி கோத்தகிரிக்கு வந்தார்.
இதே போல வேலூர் வரை நடந்து வந்த சென்னையை சேர்ந்த ஒருவர் மஞ்சூர் பிக்கட்டி பகுதிக்கு வந்தார். அவருக்கு கரோனா பாதிப்பு உறுதியானதையடுத்து கோவை மருத்துவமனையில் சிகிச்கை பெற்றுவருகிறார்.
இது அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆகவே இவர்களை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க...இந்து முன்னணி முன்னாள் பிரமுகரை மிரட்டியவர் கைது!