நீலகிரி: குன்னூர் மோட்டார் வாகனம் பழுது பார்ப்போர் நலச்சங்கம் மற்றும் நீலகிரி மாவட்ட காவல்துறை குன்னூர் காவல் உட்கோட்டம் சார்பாக இலவச வாகன பழுது நீக்கும் முகாம் 15 ஆண்டுகளாக நடைபெற்று கொண்டிருக்கிறது. இதேபோல் இந்த ஆண்டும் மே 1ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.
இந்த முகாமில் மேட்டுப்பாளையம் குன்னூர் இடையிலான தேசிய நெடுஞ்சாலையில் சுற்றுலா வாகனங்கள் பழுது ஏற்பட்டால் இலவசமாக உடனடியாக பழுது நீக்கி வாகனங்களை சரி செய்து தரப்படும் என குன்னூர் மோட்டார் வாகன பழுது பார்ப்போர் சங்கம் தெரிவித்துள்ளது.
மேலும் பாதுகாப்பாக ஓட்டுவதற்கான வாசகங்கள் அடங்கிய நோட்டீஸ் வழங்கப்பட்டது. இதற்காக ஐந்து குழுக்களாக பிரிக்கப்பட்டு பேருந்து நிறுத்தம், வெலிங்டன், எல்லநள்ளி, பர்லியார், காட்டேரி மரப்பாலம், காட்டேரி பூங்கா ஆகிய பகுதிகளில் குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளன.
உதகை வரும் சுற்றுலா பயணிகளின் வாகனங்கள் பழுது ஏற்பட்டால் உடனடியாக இலவசமாக செய்து தரப்பட கீழ்கண்ட 9842041412, 9865467681 எண்களில் தொடர்பு கொள்ள வேண்டும் என சங்கத்தினர் அறிவித்து உள்ளனர்.
மேலும் இந்நிகழ்வில் குன்னூர் சங்கத்தின் தலைவர் ராஜேஷ் அவர்கள் பொதுச் செயலாளர் ஹேன்குமார் செயலாளர் பழனி பொருளாளர் யேஸ் மற்றும் பலர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியை குன்னூர் உட்கோட்ட துணைக் கண்காணிப்பாளர் அவர்கள் போக்குவரத்து ஆய்வாளர் சுரேஷ் மற்றும் காவலர்கள் கலந்துகொண்டனர்.
இதையும் படிங்க: ஏற்காட்டில் 45ஆவது கோடை விழா