யானைகளுக்கு காடுகள் நல்ல வாழ்விடமாக இருந்தால், அந்தக் காடும் ஆரோக்கியமானதாக காணப்படும். காட்டின் ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு விதைகளை பரப்புவதில் யானைகளுக்கு முக்கியப் பங்குண்டு. அதனால் மரம், செடி, கொடிகள் நன்கு வளர்ந்து சோலை காடுகள் உருவாகக் காரணமாக அமைகிறது. இந்த சோலை காடுகள் அதிகமுள்ள நீலகிரி உயிர்ச்சூழல் மண்டலத்தில் யானைகள் முக்கியப் பங்கு வகிக்கிறது.
சமீப காலமாக, நீலகிரி மாவட்டத்தில் யானை வழித்தடம் அழிக்கப்பட்டதால், சாலைகள், குடியிருப்புகளை நோக்கி யானைகள் படையெடுக்கத் தொடங்கியுள்ளன. இதேபோன்று மேட்டுப்பாளையம்-குன்னூர் வனப்பகுதிகள் அருகே யானை வழித்தடம் மறிக்கப்பட்டுள்ளது. இதனால் சாலைக்கும், குடியிருப்பு பகுதிகளுக்கு யானைகளின் போக்குவரத்து எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
உலக யானைகள் தினமான நேற்று (ஆக.12) குன்னூர் - மேட்டுப்பாளையம் சாலையில் ஈச்சிமரம் அருகே ஹாயாக வாக்கிங் வந்த கொம்பன் யானை சிறிது நேரம் சாலையோரத்தில் அங்குமிங்கும் நடந்து திரிந்தது. அதன் பின்னர் வனப்பகுதிக்குள் சென்றது. கொம்பன் யானை காட்டிற்குள் விளையாடி திரியும் காட்சி பார்ப்போரை வியக்க வைத்தது.
மேலும், வளைவான இந்தப் பகுதிகளில் வாகனங்களை மிதவேகத்தில் ஓட்டுநர்கள் இயக்க வேண்டும் என்றும், யானைகள் அடிபட்டு இறக்கும் அபாயம் உள்ளதால் இங்கு எச்சரிக்கை அறிவிப்பு போர்டுகள் வைக்க சமூக செயற்பாட்டாளர்கள் வலியுறுத்துகின்றனர்.
இதையும் படிங்க: மாடி வீட்டை பறவைகளின் சரணாலயமாக மாற்றிய பெண்: பறவைகள் கூட்டம் பார்க்கவே அழகு...!