ETV Bharat / state

குன்னூரில் ஹெலிகாப்டர் ஒத்திகை..!- துணை ஜனாதிபதி பயணத்தையொட்டி நடவடிக்கை - குன்னூருக்கு கவர்னர் வருவதையொட்டி விபத்து ஏற்படாமல் இருக்க ஹெலிகாப்டர் ஒத்திகை

துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு மற்றும் கவர்னர் ஆர்.என். ரவி ஆகியோர் வருகிற 15-ந் தேதி ஊட்டிக்கு வருவதையொட்டி ஹெலிகாப்டர் ஒத்திகை நடைபெற்றது.

குன்னூருக்கு கவர்னர் வருவதையொட்டி விபத்து ஏற்படாமல் இருக்க ஹெலிகாப்டர் ஒத்திகை!

author img

By

Published : May 13, 2022, 6:13 PM IST

நீலகிரி : உதகைக்கு துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு மற்றும் கவர்னர் ஆர்.என்.ரவி ஆகியோர் வருகை தருகின்றனர். இதன் காரணமாக வெலிங்டன் ராணுவ பயிற்சி கல்லூரியில் உள்ள ஜிம்கான ஹெலிகாப்டர் தளத்தில் ஒத்திகை நடைபெற்றது.

கடந்த வருடம் டிசம்பர் 8 ஆம் தேதி சூலூரிலுள்ள இந்திய விமானப்படை விமான நிலையத்திருந்து குன்னூரில் உள்ள வெலிங்டன் ராணுவப் பள்ளிக்குப் ஐ.ஏ.எஃப். எம்ஐ-17 V5 எனும் ஹெலிகாப்டர் மூலம் முப்படை தளபதி பிபின் ராவத் சென்றபோது குன்னூருக்கு முன்னால் உள்ள காட்டேரி என்ற பகுதியில் அவர் சென்ற ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் முப்படை தளபதி பிபின் ராவத் மற்றும் அவருடைய குடும்பத்தார் உட்பட ஹெலிகாப்டரில் சென்ற 14 பேரும் உயிழந்தனர். இந்த சம்பவம் குறித்த விசாரணையில் மோசமான வானிலையே விபத்திற்க்கு காரணம் என இந்திய விமானப்படை தரப்பில் சொல்லப்பட்டது.

இந்த விபத்திற்கு பின் உயர்பதவி வகிப்போர் யாரும் இதுவரை குன்னூர் வெலிங்டன் ராணுவப் பள்ளிக்கு செல்லாத நிலையில் தற்போது துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு மற்றும் கவர்னர் ஆர்.என்.ரவி ஆகியோர் செல்ல உள்ளதால் ஹெலிகாப்டர் ஒத்திகை நடைப்பெற்றது. இந்த ஒத்திகையானது முக்கிய பிரமுகர்கள் வரும் ஹெலிகாப்டரில் பாதிப்புகள் ஏற்படாமல் இருக்க 4 திசைகளில் இருந்தும் ஹெலிகாப்டர்களை இயக்கி வானத்தில் ஏற்றியும் இறக்கவும் ஒத்திகை நடத்தப்பட்டது. மேலும் அப்பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளதாகவும் ராணுவ அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதையும் படிங்க : இந்தி பேசுபவர்கள் பானிபூரி விற்கிறார்கள்- ஆளுநரை வைத்துக்கொண்டே பேசிய பொன்முடி

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.