நீலகிரி மாவட்டம் குன்னூர் சுற்றுவட்டார பகுதிகளான பர்லியார் வண்டிச்சோலை, காட்டேரி, அரவங்காடு, வெலிங்டன் போன்ற பகுதிகளில் நேற்று (டிச.06) நள்ளிரவு முதல் கனமழை பெய்தது. இதில் குன்னூரில் 50 மில்லி மீட்டர் மழையளவு பதிவாகியுள்ளது. இதனை தொடர்ந்து, இன்று (டிச.07) காலை முதலே மேக மூட்டத்துடன் சாரல் மழையும் பெய்து வருகிறது.
மேலும் கடும் குளிரும் நிலவுவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. கடும் மேகமூட்டம் காரணமாக மலை பாதைகளில் வாகனங்களை இயக்க முடியாததால் வாகன ஓட்டிகள் கடும் சிரமம் அடைந்தனர். இதனால் முகப்பு விளக்குகளை ஒளிர விட்டு வாகனங்களை இயக்கி வருகின்றனர். இதனால் குன்னூர் மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இதையும் படிங்க: பம்பை ஆற்றில் வெள்ளம்: 10-க்கும் மேற்பட்ட கிராமங்கள் துண்டிப்பு