நீலகிரி: மாவட்டம் குன்னூரில் நேற்று (அக்.22) நள்ளிரவு கனமழை பெய்தது. இதில் மேட்டுப்பாளையம் - குன்னூர் இடையே ஹில் குரோவ் அருகே மலை ரயில் பாதையில் பாறைகள் விழுந்தன.
அதே நேரத்தில் மேட்டுப்பாளையத்தில் இருந்து இன்று (அக்.23) காலை 100-க்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகளுடன் குன்னூர் வந்து கொண்டிருந்த மலை ரயில், பாறை விழுந்த இடத்தில் நிறுத்தப்பட்டது.
ரயில் பாதையில் விழுந்த பாறைகள்
இந்தப் பாறைகளை அகற்றுவதில் சிக்கல் ஏற்பட்டதால் மலை ரயில் மீண்டும் மேட்டுப்பாளையம் திரும்பி சென்றது. இதனால் இன்று மட்டும் மலை ரயில் ரத்து செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
இதையும் படிங்க: அரசு ஊழியர்களுக்கு போனஸ் அறிவிப்பு