நீலகிரி மாவட்டம் குன்னூர் சுற்றுவட்டார பகுதிகளான பர்லியார், வண்டிச்சோலை, காட்டேரி அரவங்காடு, வெலிங்டன் ஆகிய பகுதிகளில் காலை முதலே சாரல் மழை பெய்து வருகிறது. இதனால் அங்கு கடுமையான பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது.
கடும் குளிரும் நிலவுவதால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து காலையில் பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளதால், மலை பாதையில் வாகனங்களை இயக்க முடியாமல் போனதால் வாகன ஓட்டுனர்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.
இதனால் முகப்பு விளக்குகளை ஒளிர விட்டு வாகனங்களை இயக்கி வருகின்றனர். விபத்து அபாயம் அதிகம் உள்ளதால் குறைவான வேகத்தில் வாகனங்களை இயக்குமாறு காவல் துறையினர் அறிவுரை வழங்கியுள்ளனர்.
இதையும் படிங்க:குன்னுாரில் தனியார் மலை ரயில் இன்று முதல் தொடக்கம்