நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் 65 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறு, குறு விவசாயிகள் தேயிலை சாகுபடியில் ஈடுபட்டு வருகின்றனர்.
தோட்டங்களில் பறிக்கும் பச்சை தேயிலையைத் தனியார் தேயிலை தொழிற்சாலை மற்றும் கூட்டுறவு தேயிலை தொழிற்சாலைகளுக்கு விநியோகித்து வருகின்றனர். இந்திய தேயிலை வாரியம் மாதத்தின் இறுதி நாளில் அந்த மாதத்திற்கான பச்சை தேயிலை விலையினை நிர்ணயிக்கும். அதன்படி தேயிலை வாரியம் அமைத்த குழுவினர் கடந்த மாதம்(ஜூலை) குறைந்தபட்ச விலையாக கிலோவுக்கு 12 ரூபாய் 82 பைசா என்று விலை நிர்ணயம் செய்துள்ளது.
இந்த விலையினை தேயிலை தொழிற்சாலைகள் தவறாமல் வழங்குகிறதா என தேயிலை வாரியம் தொடர்ந்து கண்காணித்து வருவதாக தேயிலை வாரிய செயல் இயக்குநர் எம்.முத்துகுமார் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க:குற்றவாளிகளுக்கு பிணை வழங்கக்கூடாது - கள்ளக்குறிச்சி மாணவியின் தாயார்