கரோனா ஊரடங்கு காரணமாக நீலகிரி மாவட்டம் குன்னூர் மார்க்கெட்டில் கடைகள் அமைக்கத் தடை விதிக்கப்பட்டது. பிறகு மார்க்கெட்டில் உள்ள பொருட்கள் வீணாகிப் போவதால் காலை 6 மணி முதல் 8 மணி வரை கடைகளைத் திறந்து பொருள்களை மட்டும் எடுத்து வெளியே கொண்டுவந்து விற்க அனுமதி வழங்கப்பட்டது.
இந்நிலையில் மாவட்ட நிர்வாகத்தால் அமைக்கப்பட்ட பறக்கும் படை குழுவினர் திடீரென மார்க்கெட்டில் வந்து கடைகளுக்கு அபராதம் விதித்ததால் பறக்கும் படைக் குழுவினருக்கும், வியாபாரிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
மேலும், பறக்கும் படையினர் முன்னதாக பல இடங்களில் செயல்பட்டுவந்த கடைகளை அடைத்துச் சென்றதாகவும், இவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறும் வியாபாரிகள் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு புகாரளித்தனர். தங்களது பிரச்னைகளுக்கு தீர்வுகாணுமாறும் நகராட்சி ஆணையர் பாலுவிடம் முறையிட்டனர். மேலும், உயர் அலுவலர்களிடமும் புகார் அளித்துள்ளனர்.
இதையும் படிங்க: கோடையிலும் வாடிய மண்பாண்டத் தொழில்!