நீலகிரி மாவட்டம் கூடலூர் - பந்தலூர் பகுதியில் காட்டு யானைகளின் அட்டகாசம் அதிகரித்துவருகிறது. தமிழ்நாடு பகுதிக்குள் உள்ள யானைகளைவிட கேரளாவிலிருந்து வரும் யானைகள் ஆக்ரோஷத்துடன் மனிதர்களைத் தாக்குவதும், வேளாண் பயிர்களைச் சேதப்படுத்துவதும் அதிகரித்துள்ளது.
இந்நிலையில் கேரள எல்லைச் சோதனைச்சாவடி பாட்ட வயல் பகுதியில் தினந்தோறும் இரவு நேரங்களில் வரும் யானைகள் பொதுமக்களை அச்சுறுத்தியும், வேளாண் நிலத்தைச் சேதப்படுத்தியும் வருகிறது.
இதனால் பாட்ட வயல் சோதனைச்சாவடி அருகில் கண்காணிப்பு கோபுரம் அமைத்து டார்ச் விளக்குகள் மூலம் கண்காணித்தும், யானை நடந்துவரும் வழித்தடத்தில் தீ மூட்டியும், விடிய விடிய கண்காணிப்புப் பணியில் வனத் துறை ஊழியர்கள் ஈடுபட்டுவருகின்றனர்.
இதன்மூலம் அப்பகுதி மக்கள் நிம்மதி அடைந்துள்ளனர். இந்தப் பணியில் சுழற்சி அடிப்படையில் நாள்தோறும் ஐந்து பேர் இப்பணியில் ஈடுபடுவார்கள் என வனத் துறையினர் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு: 2 பேருக்கு சாகும்வரை ஆயுள் தண்டனை விதிப்பு