நீலகிரி: குன்னூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், கரோனா பூஸ்டர் டோஸ் சிறப்பு தடுப்பூசி முகாம் இன்று (ஜனவரி 11) தொடங்கியது. இம்முகாமிற்கு மாவட்ட ஆட்சியர் சா.ப. அம்ரித் தலைமை வகித்தார். இதில் சிறப்பு விருந்தினராக அமைச்சர் ராமச்சந்திரன் கலந்துகொண்டு முகாமை தொடங்கிவைத்தார்.
நீலகிரி மாவட்டத்தில், மருத்துவம், மருத்துவம் சார்ந்த பணியாளர்கள், முன்களப் பணியாளர்கள், 60 வயதிற்கு மேல் இணை நோயுள்ளவர்கள் என மொத்தம் 23 ஆயிரத்து 169 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட உள்ளது. இதற்காக 75 முகாம்கள் தயார் நிலையில் உள்ளன. அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து வனத் துறை அமைச்சர் முதல் பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக்கொண்டார். பின்னர் முன்களப் பணியாளர்கள் பூஸ்டர் தடுப்பூசிகளைப் போட்டுக்கொண்டனர். முகாம் நிகழ்ச்சி முடிந்து வனத் துறை அமைச்சர், பல்வேறு இடங்களில் உள்ள நியாயவிலைக் கடைகளில் ஆய்வுகள் மேற்கொண்டார். இதில் பொங்கல் பரிசுகள் முறையாக மக்களுக்குச் சென்றடைவது குறித்து கேட்டறிந்தார்.
இதையும் படிங்க: Video: பெண் சிலையை முத்தமிட்டுக் கொஞ்சும் முதியவர்!