உதகை அரசு தலைமை அரசு மருத்துவமனையில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள ஆயிரம் மெட்ரிக் டன் உற்பத்தித் திறன் கொண்ட ஆக்சிஜன் நிலையத்தைதமிழ்நாடு வனத்துறை அமைச்சர் ராமசந்திரன் நேற்று (ஜூலை.13) தொடங்கி வைத்தார்.
தொடர்ந்து, உங்கள் தொகுதியில் முதலமைச்சர் துறையின் சார்பாக நல திட்ட உதவிகள், முன்கள பணியாளர்களுக்கு ஊக்கத் தொகை, கரோனா பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு நலத்திட்டங்களை வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், " ஒரு லட்சத்து 30 ஆயிரத்து 6 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட தமிழ்நாட்டில் 23 விழுக்காடு வனப்பகுதி மட்டுமே உள்ளது. அதனை 33 விழுக்காடாக உயர்த்த வரும் 10 ஆண்டுகளில் 28 கோடி மரங்களை நட இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
நீலகிரி மாவட்டத்தில் ஆங்கிலேயர் காலத்தில் நடப்பட்டுள்ள யூக்கலிப்டஸ் மரங்களால் நிலத்தடி நீர் குறைவதால், அந்த மரங்களை வெட்டி அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும். தமிழ்நாட்டில் ஒவ்வொருவரும் பிறந்த நாளன்று ஒரு மரக்கன்றையாவது நட வேண்டும்" என கேட்டுக்கொண்டார்.
இதையும் படிங்க: விடுபட்ட கேங்மேன் போராட்டம் எதிரொலி: மின் துறை அமைச்சர் நடவடிக்கை