நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே டிசம்பர் 11ஆம் தேதி முதல் டிசம்பர் 13ஆம் தேதிக்குள் அடுத்தடுத்து மூன்று பேர் உயிரிழந்ததை அடுத்து அப்பகுதியில் சுற்றித்திரியும் யானையை பிடிப்பதற்காக வனத்துறையினர் முடுக்கிவிடப்பட்டனர்.
யானைக்கு மயக்க ஊசி
இந்த யானையை மயக்க ஊசி போட்டு பிடிக்க வனத்துறையினர் திட்டமிடப்பட்டு மருத்துவர் குழுவினரை வரவழைக்கப்பட்டு நேற்று (டிசம்பர் 16) மாலை யானைக்கு மயக்க ஊசி செலுத்திய நிலையில் யானை அடர்ந்த வனப்பகுதிகள் சென்றது.
யானையை பிடிப்பத்தில் சிக்கல்
இன்று (டிசம்பர் 17) காலை யானையை பிடிக்க 3 மருத்துவ குழுவுடன் செப்பந்தோடு வனப்பகுதியில் முகாமிட்டனர். இருப்பினும் ஆட்கொல்லி யானையை தனிமைப்படுத்த முடியவில்லை. தொடர்ந்து அந்த யானை மக்கள் வசிக்கும் பகுதிக்கு செல்லாமல் இருக்க வனத்தை சுற்றி வனத்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் அதன் நடமாட்டத்தை கண்டறிய அதிநவீன ட்ரோன் கேமரா மூலம் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். ஆட்கொல்லி யானையை பிடிக்க 3 கும்கி யானைகளும் தயார் நிலையில் உள்ளன.
ஆட்கொல்லி யானையை தேடும் பணியில் வனத்துறை
மேலும் இந்த யானை கூட்டத்தில் ஆட்கொல்லி யானை உள்ளதா அல்லது புதர் பகுதியில் மறைந்துள்ளதா என வனத்துறையினர் தேடி வருகின்றர். யானையை கண்காணிக்க யானை நடமாட்டம் உள்ள பகுதியில் 25 தானியங்கி கேமரா பொருத்தவும் வனத்துறை முடிவு செய்துள்ளது.