நீலகிரி மாவட்டம் குன்னூரில் திறந்த வெளியில் மருத்துவக் கழிவுகள் கொட்டுவது தொடர்பாக நகராட்சி அலுவலர்கள் அடிக்கடி ஆய்வு செய்து வருகின்றனர்.
நகராட்சி ஆணையர் பாலு உத்தரவின் பேரில் சுகாதாரத் துறை அலுவலர்கள் முருகன், செல்வராஜ் உள்ளிட்டோர் குன்னூரில் இன்று (அக்.20) ஆய்வு செய்தனர்.
இதில் மௌண்ட் ரோடு கூட்டுறவு வங்கி அருகே மருத்துவ கழிவுகள் கொட்டப்பட்டிருப்பது தெரியவந்தது. அந்தக் கழிவுகளில் இரண்டு தனியார் சிகிச்சையகத்தின் மருந்து சீட்டுகள் இருந்தன.
உடனே இது சம்பந்தப்பட்ட மருத்துவர்கள் இரண்டு பேருக்கு தலா ரூ. 15 ஆயிரம் அபராதத்தை நகராட்சி அலுவலர்கள் விதித்தனர்.
இதையும் படிங்க: ஏரியில் வீசப்படும் மருத்துவ கழிவுகள்... அச்சத்தில் ராசிபுரம் மக்கள்!