நீலகிரி மாவட்டத்தில், தற்போது கோடை சீசன் களைகட்டிவருகிறது. இந்த சீசனை அனுபவிக்க தமிழ்நாடு மற்றுமின்றி பல்வேறு மாநிலங்களிலிருந்து நாள்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வருகை தந்தவண்ணம் உள்ளனர்.
உதகை அரசு தாவரவியல் பூங்காவில் 123ஆவது மலர் கண்காட்சி நடைபெற்றுவரும் நிலையில், அங்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தப்பட்டுவருகின்றன.
அதன்படி, நேற்று அங்கு கல்லூரி மாணவிகளின் ஆடை அலங்கார போட்டி நடைபெற்றது.
இதில், கலந்துகொண்ட 15 மாணவிகள் பல்வேறு உடைகளை அணிந்து ஒய்யாரமாக வந்த காட்சிகள் சுற்றுலாப் பயணிகளை வெகுவாக கவர்ந்தது. அழகிகளின் அறிவு, அழகு, திறமை, ஆடை அணிவகுப்புகளை வைத்து மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.