நீலகிரி மாவட்டத்தில் கரோனா பாதிப்பைக் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது. வெளியூர்களிலிருந்து நீலகிரிக்கு வருபவர்கள் பர்லியார் பகுதியில் கரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப்படுகிறார்கள்.
மேலும், சோதனை முடிவுகள் வரும்வரை அரசு அனுமதித்த மையங்களில் அவர்கள் தனிமைப்படுத்தப்படுகிறார்கள். குன்னூர் டிடிகே சாலைப் பகுதியைச் சேர்ந்த ஒருவருக்கு தொற்று உறுதியானதால், அவரது மகன் உள்பட அவரது குடும்ப உறுப்பினர்கள் 4 பேர் கரோனா சோதனை செய்யப்பட்டு குன்னூர் தனியார் கல்லூரியில் தனிமைப்படுத்தப்பட்டனர்.
அச்சிறுவனின் பிறந்தநாளைக் கொண்ட விரும்பிய குடும்ப உறுப்பினர்கள், தன்னார்வலர்கள் மூலம் கேக்கை தனிமைப்படுத்தும் மையத்துக்கு வரவழைத்தனர். பின்னர், அந்த மையத்தில் இருந்த மற்றொறுவருக்கும் பிறந்தநாள் என்பதை அறிந்து இருவரையும் இணைந்து கேக் வெட்ட செய்து பிறந்தநாளைக் கொண்டாடினர். இந்நிகழ்வு, கரோனா சோதனையின் முடிவுகளுக்காக கலக்கத்துடன் காத்திருந்தவர்களிடத்தில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
இதையும் படிங்க: சென்னையில் குறைந்து வரும் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள்!