ETV Bharat / state

அரசு பேருந்தில் பெண் போலீசிடம் சில்மிஷம்.. முன்னாள் ராணுவ வீரர் கைது! - Nilgiris

குன்னூரில் அரசு பேருந்தில் பயணித்த பெண் காவலரிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட முன்னாள் காவலரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

ex service man arrested and jailed for misbehave with a woman constable traveling in a government bus in Coonoor
குன்னூரில் அரசு பேருந்தில் பயணித்த பெண் காவலரிடம் சில்மிஷம் செய்த முன்னாள் ராணுவ வீரரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்
author img

By

Published : Apr 12, 2023, 2:04 PM IST

நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் உள்ள காவல் நிலையம் ஒன்றில் பணிபுரியும் பெண் காவலர் ஒருவர் பணி நிமித்தமாகக் கோவை சென்று விட்டு குன்னூர் திரும்பிய வழியில் மேட்டுப்பாளையம் பேருந்து நிலையத்தில் அரசு பேருந்தில் ஏறியுள்ளார். அதே பேருந்தில் பின் இருக்கையில் அமர்ந்து வந்த கோத்தகிரி அஜூர் பகுதியைச் சேர்ந்த ராஜ் என்பவரது மகன், முன்னாள் ராணுவ வீரர் தர்மன் (56) பெண் போலீஸ் அமர்ந்திருந்த இருக்கைக்குப் பின் இருக்கையில் அமர்ந்து கொண்டு பெண் காவலரிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.

முதலில் தட்டிக் கழித்த பெண் காவலர் ஒரு கட்டத்தில் தர்மனைத் தாக்கியுள்ளார். அதற்குத் தர்மன் அந்த பெண் காவலரைத் திருப்பித் தாக்கியுள்ளார். பேருந்திலிருந்தவர்கள் தர்மனிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட போது, “எனக்கு எஸ்பி தெரியும், டிஎஸ்பி தெரியும்” என்று கூறியுள்ளார். இதனைக் கேட்டு பேருந்து பயணிகள் ஒரு வேலை நிஜமாக இருக்குமோ என்று பின்வாங்கியுள்ளனர்.

பின்பு பேருந்து நடத்துநரும் தர்மனும் ஒரே சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் காட்டேரி பகுதியில் தர்மனைக் காப்பாற்றுவதாகக் கருதி இறக்கி விட்டுள்ளார். பெண் காவலரை காட்டேரியில் இறங்க வேண்டாம் என்றும் நடத்துநர் கூறியுள்ளார். இதனையடுத்து பெண் காவலரும் தர்மனை பின் தொடர்ந்து காட்டேரியில் இறங்கியுள்ளார்.

அங்கிருந்து தர்மன் தப்பியோடி மற்றொரு பேருந்தில் ஏறிய போது அந்த காவலரும் அதே பேருந்தில் ஏறி, குன்னூர் லெவல் கிராஸ் பகுதியில் பேருந்தை நிறுத்தி சக காவலர் உதவியுடன் தர்மனை இறக்கி, குன்னூர் காவல் நிலையத்திற்கு விசாரணைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். விசாரணையில் தர்மன், பெண் காவலரிடம் அத்துமீறியது உறுதியானதைத் தொடர்ந்து காவலரிடம் புகாரைப் பெற்றுக் கொண்டனர்.

புகாரைத் தொடர்ந்து குன்னூர் ஆய்வாளர் சதீஷ், உதவி ஆய்வாளர் ஆனந்தராஜ் மற்றும் காவல்துறையினர் தர்மனைக் கைது செய்து மருத்துவ பரிசோதனைக்குப் பின் குன்னூர் குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி முன் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். பேருந்தில் பயணித்த பெண் காவலரிடம் முன்னாள் ராணுவ வீரர் சில்மிஷத்தில் ஈடுபட்டு, அவர் மீது தாக்குதல் நடத்திவிட்டு பேருந்திலிருந்து தப்ப முயன்ற சம்பவம் அப்பகுதி மக்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: 5 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த திமுக கவுன்சிலர் கைது!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.